பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - புறத்திணையியல் நின்ற நிலைகருதி யேகினார் நீள்கழைய குன்றங் கொடுவில் லவர்." [வெண்பா-வெட்சி ரு] புடை கெட ஒற்றின் ஆகிய வேயே - மாற்றரசர்பக்கத்துள்ளார் அறியாதவகை ஒற்றரால் ஆகிய ஒற்றுதலும். ஒற்று என்பது எவ்விடத்தும் வேண்டுமாயினும், ஆதிவிளக்காக இவ்வோத்தின் முதற்கண் வைத்தாரென்று கொள்க. உதாரணம்:- "நிலையும் நிரையும் நிரைப்புறத்து நின்ற கிலையுஞ் செருமுனையுள் லைகி-இலைபுனைந்த கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோய் சென்றறிந்து நள்ளிருட்கண் வந்தார் மர்." [வெண்பா - வெட்சி-க.] வேய் புறம் முற்றின் ஆகிய புறத்து இறை - (அவ்வாறு) வேங்க்கப்பட்ட இடத் தின் புறத்தினைச் சூழ்தலான் ஆகிய புறத் திருக்கை. வேய்' என்பது ஆகுபெயராய் அவ்விடத்தின்மேல் நின்றது. உதாரணம்:- முற்றிய ஊர் உதாரணம்:- "உய்ந்தொழிவா நீங்கில்லை யூழிக்கட் டீயேபோல் முந்தமரு ளேற்றார் முரண்முருங்கத் - தந்தமின் ஒற்றினா னொற்றி யுரவோர் குறும்பினைச் சுற்றினார் போகாமற் சூழ்ந்து."[வெண்பா -வெட்சி-எ] கொலை - (அவ்வாறு) சூழப்பட்ட ஊரை அழித்தல். "இகலே துணையா வெரிதவழச் சீறிப் புகலே யரிதென்னார் புக்குப் - பகலே தொலைவில்லார் வீழத் தொடுகழ லார்ப்பக் கொலைவில்லார் கொண்டார் குறும்பு." [வெண்பா-வெட்சி-அ] ஆ கோள் - (ஆண்டுளதாகிய) நிரையைக் கோடல். உதாாணம்:-- "கொடுவரி கூடிக் குழூஉக்கொண் டனைத்தால் நெடுவரை நீள்வேய் நாலு-நடுவூர்க் கணநிரை கைக்கொண்டு கையகலார் நின்ற நிணகிரை வேலார் நிலை." [வெண்பா-லெட்சி-கூ] பூசல் மாற்று-(அவ்வாறு கொண்ட நிரையை மீட்டற்கு வந்தார் பொரும்) பூசல் மாற்றிப் பெயர்தல். உதாரணம்:- சூழ்ந்த நிரைபெயரச் சுற்றித் தலைக்கொண்டார் வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்குணிய - தாழ்ந்த குலவுக் கொடுஞ்சிலைக்கைக் கூற்றனையா ரெய்த புலவுக் கணைவழிபோய்ப் புள்."[வெண்பா- வெட்சி-ய] நோய் இன்று உய்த்தல் -(அவ்வாறு கொண்ட நிரையை) வருந்தாமல் உய்த்தல், 9