பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதாரணம்:- பொருளதிகாரம் - புறத்திணையியல் "இளமா வெயிற்றி யிவைகாணின் னையர் தலைநாளை வேட்டத்துத் தந்த நிரைகள் கொல்லன் றுடியன் கொளைபுணர்சீர் வல்ல நல்லியாழ்ப் பரணர் தம் முன்றி னிறைந்தன. முருந்தே ரினநகை காணாய்நின் னையர் கரந்தை யலறக் கவர்ந்த நிரைகள் கள்விலை யாட்டிநல் வேய்திரி கானவன் புள்வாய்ப்பச் சொல்கணி முன்றி னிறைந்தன. கயமல ருண்கணாய் காணாய்நின் னையர் அயலூ ரலற வெறிந்தநல் லாக்கள் நயனின் மொழியர் நரைமுதிர் தாடி எயின ரெற்றியர் முன்றினிறைந்தன."[சிலப்-வேட்டுவவரி] (கூ) கஉ. மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையு மத்திணைப் புறனே. இதுவும் அது. இ-ள்:--- மறம் கடை கூட்டிய குடி நிலை-மறத்தொழில் முடித்தலையுடைய குடியி னது நிலைமையைக் கூறலும், சிறந்த கொற்றவை நிலையும்-சிறந்த கொற்றவையது நிலை மையைக் கூறலும், அ திணை புறன் - குறிஞ்சித்திணைப் புறனாகிய வெட்சித்திணையாம். குடிநிலை என்றதனால் மைந்தர்க்கும் மகளிர்க்கும் பொதுவாதல் அறிக. உதாரணம்:- " யானை தாக்கினு மாவுமேற் செலினும் நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும் சூழ்மகன் மாறா மறப்பூண் வாட்கை வலிகூட் டுணவின் வாட்குடிப் பிறந்த புலிப்போத் தன்ன புல்லணற் காளை செந்நா யன்ன கருவிற் சுற்றமொடு கேளா மன்னர் கடிபுலம் புக்கு நானா தந்து நறவுநொடை தொலைச்சி இல்லக் கள்ளின் றொப்பிப் பருகி மல்லன் மன்றத்து மழவிடை கெண்டி மடிவாய்த் தண்ணுமை நடுவட் சிலைப்பச் சிலைவி லெறுழ்த்தே தோ ளோச்சி வலன்வளையூப் பகன்மகிழ் தூங்குந் தூங்கா விருக்கை முளிதலை களித்தவ ருள்ளுங் காதலிற் றனக்குமுகந் தேந்திய பசும்பொன் மண்டை இவற்கு தென்னா ததற்குமன் றிசினே கேட்டியோ வாழி பாண் பாசறைப் பூக்கோ ளின் றென் றறையும் மடிவாய்த் தண்ணுமை யிழிசினன் சூரலே. (புறம்- உஅகூ)