பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - புறத்திணையியல் நாடவற் கருளிய பிள்ளை யாட்டும் காட்சி கல்கோ ணீர்ப்படை நடுதல் சீர்த்த மரபிற் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபிற் கல்லொடு புணரச் சொல்லப் பட்ட வெழுமூன்று துறைத்தே. கூகூ வேலன் முதலாக வெட்சித்திணைக்குரிய துறை கூறினார், இனி அதற்கு மாறா கிய கரந்தைத் திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அதுவும் ஆநிரைமீட்டல் கார ணமாக அந்நிலத்தின்கண் நிகழ்வதாகலின், வெட்சிப்பாற்பட்டுக் குறிஞ்சிக்குப் புறனா யிற்று. இ-ள்:- வெறியாட்டயர்ந்த சாந்தளு மென்பது முதலாகத் தலைத்தாணெடுமொழி தன்னொடு புணர்த்தலும் என்பது ஈறாகச் சொல்லப்பட்ட பதின்மூன்று துறையும் காட்சி முதலாக வாழ்த்தல் ஈறாகக் கல்லொடு புணர்த்துக் கூறும் துறையொடுங் கூடச் சொல்லப்பட்ட இருபத்தொரு துறைத்து. வெறி அறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் - வெறி யாடுதலை அறியும் சிறப்பினையுடைய வெவ்லிய வாயினையுடைய வேலன் வெறியாடிய காந்தளும். காந்த ளென்பதனை மடலேறுதற்குப் பெயராகக் கூறுவா ருளராகலின், வெறியா ட்டயர்ந்த காந்த ளென்றார். அன்றியும், காந்தள் என்பது மடலேறுதலான் அத்துணை யாற்றாளாகிய பெண்பால்மாட்டு நிகழும் வெறி 'காந்தள்' எனவும் பெயராம். இத னானே காமவேட்லையின் ஆற்றாளாகிய பெண்பாற்பக்கமாகிய வெறியும் அந்நிலத் துள்ளார் வென்றி வேண்டி ஆடும் வெறியும் கொள்ளப்படும். இவ்வெறி இக்நிலத்திற் குச் சிறந்தமை அறிக. இது வெட்சிப் பின்னர் வைத்தார், பெரும்பான்மையும் குறிஞ்சிபற்றி நிகழு மாகலின். உதாரணம்:- வெய்ய நெடிதுயிரா வெற்ப ன்ளியினையா ஐய நனிநீங்க வாடினாள்--மையல் அயன் மனைப் பெண்டிரோ டன்னைசொ லஞ்சி வியன்மனையு ளாடும் வெறி."[வெண்பா - இருபாற்பெருந்திணை -] இது காமவேட்கை தோற்றாமல் தலைமகள் தானே முருகு மேல்நிறீஇ யாடியது. வென்றி வேண்டியாடுதற்குச் செய்யுள் சிலப்பதிகாரத்து வேட்டுவைரியுட் கண்டு கொள்க. இனி வேலன்தானே ஆடியதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. உறு பகை வேந்து இடை தெரிதல் வேண்டி எந்து புகழ் போந்தை வேம்பு ஆர் என வரும் மா பெருந் தானையர் மலைந்த பூவும்-மிக்க பகைவேந்தன் வேறுபாடு தெரிதல் வேண்டி உயர்ந்த புகழையடைய போக்தையெனவும் வேம்பெனவும் ஆரெனவும் தமிழ்நாட்டு நிலவேந்தர் சூடிய பூவும். உதாரணம்:- குடையலர் காந்தட்டன் கொல்லிச் சுனைவாய்த் தொடையவிழ் தண்குவளை சூடான்- புடைதிகழுந்