பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ளடு தொல்காப்பியம் - இளம்பூரணம் தேரதிரப் பொங்குந் திருந்துவேல் வானவன் போரெதிரிற் போந்தையாம் பூ." [வெண்பா - பொது-] இது சேரன் பூ. "தொடியணிதோ ளாடவர் தும்பை புனையக் கொடியணிதேர் கூட்டணங்கும் போரின் முடியணியும் காத்தல்சால் செங்கோற் கடுமா னெடுவழுதி ஏத்தல்சால் வேம்பி னிணர்." [வெண்பா-பொது-உ] இது பாண்டியன் பூ. "கொல்களி றூர்வர் கொலைமலி வாண்மறவர் வெல்கழல் வீக்குவர் வேலிளைஞர் - மல்குங் கலங்க லொலிபுனற் காவிரி நாடன் அலங்க லமரழுவத் தார்." (வெண்பா பொது-க. இது சோழன்பூ. நிரைகோள் கேட்டவழி நெடுநிலவேந்தரும் கதுமென எழுவராதலின், நிரை மீட்டலின்கண் பூப் புகழப்பட்டது. வாடா வள்ளி-வாடுதல் இல்லாத வள்ளி

'வள்ளி' என்பது ஒருகூத்து ; அஃது அந்நிலத்தின் நிகழ்தலின் 'வாடாவள்ளி என்றார். உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க. வயவர் ஏத்திய ஓடா கழல் நிலை-வீரராற் புகழப்பட்ட கெடாத கழல் நிலை உதாரணம்:- "வாளமரின் முன்விலக்கி வான்படர்வார் யார்கொலோ கேளலார் நீக்கிய கிண்கிணிக்காற் - காளை கலங்கழல் வாயிற் கடுத்தீற்றி யற்றற் பொலங்கழல் கான்மேற் புனைவு.'" (வெண்பா-பொது-எ] ஓடா உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும்-ஓடாத வெகுண்ட வேந்தரைச் சாத்திய உன்ன நிலையும். 'உன்னம்' என்பது மரம். அது தன் நாட்டகத்துக் கேடுவருங்கால் உலறியும், வாராத காலம் குழைந்தும் சிற்கும். உதாரணம்:- "துன்னருந் தானைத் தொடுகழலான் றுப்பெதிர்ந்து முன்னர் வணங்கார் முரண்முருங்க மன்னரும் ஈடெலாந் தாங்கி யிகலவிந்தார் நீயுநின் கோடெலா முன்னங் குழை." (வெண்பா-பொது-ச பிறவும் நிமித்தமாகி வருவன வெல்லாவற்றிற்கும் இதுவே துறையாகக் கொள்க. மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின் தாவா விழு புகழ் ஆவை நிலையும்-மாயோ னைப் பொருந்திய நிலைபெற்ற பெருஞ் சிறப்பினையடைய கெடாத விழுப்புகழைப் பொருந்திய பூவை நிலையைக் கூறுதலும்.