பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - புறத்திணையியல் பூ வைமலர்ச்சியைக்கண்டு மாயோன் நிறத்தை யொத்ததெனப் புகழ்தல் நாடெல்லை காடாதலின், அக்காட்டிடைச் செல்வோர் அப்பூவையைக் கண்டு கூறுதல், உன்னம் கண்டு கூறினார் போல இதுவும் ஓர் வழக்கு. உதாரணம்:-- 56 பூவை விரியும் புதுமலரிற் பூங்கழலோய் யாவை விழுமிய யாமுணரேம் - மேவார் மறத்தொடு மல்லர் மறங்கடந்த காளை நிறத்தொடு நேர்தருத லான். [வெண்பா -பாடாண்-] இஃது உரையன்றென்பார், மாயோன் முதலாகிய தேவர்களோடு உவமித்தலே பூவைநிலை யென்ப. உதாரணம்:- "இந்திர னென்னி னிரண்டேக ணேறூர்ந்த அந்தரத்தா னென்னிற் பிறையில்லை - அந்தரத்திற் கோழியா னென்னின் முகனொன்றே கோதையை யாழியா னென்றுணரற் பாற்று." வேறு கடவுளரை நோக்கி உவமித்து வருபவையெல்லாம் பூவை நிலையாகக் கொள்க. என்னை? "ஏற்றூர்தி யானு மிகல்வெம்போர் வானவனும் ஆற்றலு மாள்வினையு மொத்தொன்றி னொவ்வாரே கூற்றக் கணிச்சியான் கண்மூன் றிரண்டேயாம் ஆற்றல்சால் வானவன் கண். என முத்தொள்ளாயிரத்து வந்தவரறு காண்க. பிறவும் அன்ன. பூவைநிலையும் அந்நி லத்தின் தெய்வமாகிய கருப்பொருளாதலின், அதன்மேல் வந்தது. ஆர் அமர் ஓட்டலும் -அரிய அமரைப் போக்குதலும். உதாரணம்:- எனவும், எ "புலிக்கணமுஞ் சீயமும் போர்க்களிலும் போல்வார் வலிச்சினமு மானமுந் தேசும் - ஒலிக்கும் அருமுனை வெஞ்சுரத் தான்பூசற் கோடிச் செருமலைந்தார் சீற்றஞ் சிறந்து." [வெண்பா - கரந்தை-ச] ஆ பெயர்த்துத்தருதல்-நிரை மீட்டல். உதாரணம்:-- "அழுங்கனீர் வையகத் தாருயிரைக் கூற்றம் விழுங்கியபின் வீடுகொண் டற்றாற் - செழுங்குடிகள் தாரார் கரந்தை தலைமலைந்து தாங்கொண்டார் நேரார்கைக் கொண்ட நிரை." [வெண்பா-காந்தை-க] "ஏறுடைப் பெருநிரை பெயர்தாப் பெயரா திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த வல்வின் மறவ ரொடுக்கங் காணாய்