பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

672 தொல்காப்பியம் - இளம்பூரணம் செல்லல் செல்லல் சிறக்கன் னுள்ளம் முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத் தாவுபு செறிதரு மான்மேற் புடையிலங் கொள்வாட் புனைகழ லோயே" [புறம்-உருகூ) எனவும் வரும். சீர்சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்-சீர்மை பொருந்திய வேந்தி னது மிகுதியை எடுத்துக் கூறலும். உதாரணம்:-- "அங்கையு ணெல்லி யதன்பய மாதலாற் கொங்கலர் தாரான் குடைநிழற்கீழ்த்- தங்கிச் செயிர்வழங்கும் வாளமருட் சென்றடையார் வேல்வாய் உயிர்வழங்கும் வாழ்க்கை யுறும்." [வெண்பா - கரந்தை - யங] இது மற்றுள்ள திணைக்கும் பொது. தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்-தன்மாட்டுள்ள போர்வலி முயற்சியினாலே கொடுஞ்சொற்களைத் தன்னொடு புணர்த்திக் கூறுதலும். உதாரணம்:- ஆளமர் வெள்ளம் பெருகி னதுவிலக்கி வானொடு வைகுவேம் யாமாக--நாளுங் கழிமகிழ்வென்றிக் கழல்வெய்யோ யீயப் பிழ்மது வுண்பார் பிறர்." [வெண்பா-கரந்தை-க்க] 66 இது மற்றுள்ள திணைக்கும் பொது. வரு தார் தாங்கல் வாள் வாய்த்து கவிழ்தல் என்று இருவகைப்பட்ட பிள்ளை நிலையும் - மேல்வருகின்ற கொடிப்படையைத் தாங்கலும் லாள் வாய்த்தலாற் படுதலும் என இரண்டு வகைப்பட்ட பிள்ளை நிலையும். உதரணம்:- "பிள்ளை கடுப்பப் பிணம்பிறங்க வாளெறிந்து கொள்ளைகொளாயந் தலைக்கொண்டார் - எள்ளிப் பொருதழிந்து மீளவம் பூங்கழலான் மீளான் ஒரு தனியே நின்றா னுளன்." (வெண்டா-கரந்தைஎ] இது வருதார் தாங்கள். "உரைப்பி னதுவியப்போ வொன்னார்கைக் கொண்ட நிரைப்பி னெடுந்தகை சென்றான்- புரைப்பின் றுளப்பட்ட வாயெல்லா மொள்வாள் சொளவே கனப்பட்டான் சென்றான் காந்து. [வெண்பா-காந்தை-சு] இது வாள் வாய்த்துக் கவிழ்தல். வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடு அவற்கு அருளிய பிள்ளை யாட்டும் வாளான் மாறுபட்டு எழுந்தவனை மகிழ்ந்து பறை ஒலிப்ப அவற்குத் துறக்க மாகிய நாட்டை அளித்த பிள்ளையாட்டும்,