பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் வெண்டலைப் புணரியின் மான்குளம் பலைப்பு வலமுறை வருவது முண்டென் றலமந்து நெஞ்சுநடுங் கவலம் பாயத் துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே." [புறம்-கூக) எரி பரந்தெடுத்தல் (பகைவரது நாடு) எரி பரந்துகிளர்தல். உதாரணம்: "வினைமாட்சிய விரை புரவியொடு மழையுருவின தோல் பரப்பி முனைமுருங்கத் தலைச்சென்றவர் விளைவயல் சுவர்பூட்டி மனைமரலம் விறகாகக் கடிதுறைநீர்க் களிறுபடீஇ எல்லுப் படலிட்ட சுடுதீ விளக்கஞ் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப் புலங்கெட விறுக்கும் வரம்பி றானைத் துணைவேண்டாச் செருவென்றிப் புலவுவாட் புலர்சாந்தின் முருகற் சீற்றத் துருகெழு குரிசில் மயங்குவள்ளை மலராம்பற் பனிப்பகன்றைக் கனிப்பாகற் கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணை பாழாக ஏம நன்னா டொள்ளெரி யூட்டி நாம நல்லமர் செய்ய ஓராங்கு மலைந்தன பெருமகின் களிறே.' [புறம் - கசு] வயங்கள் எய்திய பெருமையம்- விளக்கம் எய்திய பெருமையும். உதாரணம் :- "இருங்கண்ணி யானையொ டருங்கலந் தெறுத்துப் பணிந்துகுறை மொழிவ தல்லது பகைவர் வணங்கா ராதல் யாவதோ மற்றே ', உருமுடன்று சிலைத்தலின் விசும்பதிர்ந் தான்கு கண்ணதிர்பு முழங்குங் கடுங்குரன் முரசம் கால்கிளர்ங் தன்ன வூர்தி கான்முளை எதிர்நிகழ்ந் தன்ன சிறையருஞ் சீற்றத்து நளியிரும் பரப்பின் மாக்கடன் முந்நீர் நீர்துனைந் தன்ன செலவின் நிலந்திரைப் பன்ன தானையோய் நினக்கே, [ பதிற்றுப்பத்து] கொடுத்தல் எய்திய கொடைமையும் கொடுத்தலைப் பொருந்திய மையும். கொடை