பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் -ள்:-- உழிஞை மருதத்துப் புறன் - உழிஞை என்னும் புறத்திணை மருதம் என் லும் அகத்திணைக்குப் புறனாம்: முழுமுதல் ஆரணம் முற்றலும் கோடலும் அனைநெறி மரபிற்று ஆகும் அது முழுமுதல் அரணம் முற்றுதலும் அழித்தலுமாய் வருந்தன்மைத் தாகிய நெறியை மரபாக உடைத்து. 'முதல் அரணம்' என்றதனான், தலையும் இடையும் கடையும் என மூவகைப்படு மவற்றுள் தலையரண். அஃதாவது, அரணிற்குக் கூறுகின்ற இலக்கணம் பலவும் உடைத் தாதல். மருதத்திற்கு இது புறனாயவாறு என்னையெனின், வஞ்சியிற் சென்ற வேந்த னொடு போர்செய்த லாற்றாது உடைந்து மாற்றுவேந்தன் அரண் வலியாகப் போர் செய்யுமாகலானும், அவர் காட்டகத்தாகலானும், அவ்வழிப் பொருவார்க்கு விடியற்பொ ழுது காலமாகலானும் அதற்கு இது புறனாயிற்று. நாட்டெல்லையின் அழிப்பு உழி ஞையாகுமோ வெனின், அது பெரிதாயின் அதன் பாற்படும்; சிறிதாயின் வெட்சி யுள் ஓதின ஊர்க்கொலை [புறத்திணையங] யுள் அடங்கும். (அ) F:55. அதுவே தானுமிருநால் வகைத்தே. இஃது, உழிஞைத்திணையை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. இ - ள் - அதுதான் இருநால் வகைத்து - உழிஞைத்துறைதான் எட்டு வகைத்து. அவையாமாறு முன்னர்க் காணப்படும். (ஏகாரமும் உம்மையும் அசைகள்.] {கூ) கஅ. கொள்ளார் தேளங் குறித்த கொற்றமும் உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்புங் தொல்லெயிற் றிவர்தலுந் தோலது பெருக்கமும் அகத்தோன் செல்வமு மன்றி முரணிய புறத்தோ னணங்கிய பக்கமுந் திறற்பட ஒருதான் மண்டிய குறுமையு முடன்றோர் வருபகை பேணார் வாரெயி லுளப்படச் சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே. இதுவும் உழிஞை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்--கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம் முதலாகச் சொல்லப்பட்டன உழி லஞத் துறையாம். கொள்ளார் தேளம் குறித்த கொற்றமும் - பகைவாது தேயத்தைக் கொள்ளக் குறித்த கொற்றமும்.[கொள்ளார். தன்னை இறையெனக் கொள்ளாரும் தன் ஆணை யைக் கொள்ளாரும். உதாரணம்:--- 26 ஆனா வீகை யடுபோ ரண்ணனின் யானையு மலையிற் றோன்றும் பெருமநின் றானையுங் கடலி ஞெலிக்கும் வைந்நுதி வேலு மின்னின் விளங்கு ஞாலத் தரசுதலை பனிக்கு மாற்றலை யாகலிற் புரைதீர்ந் தன்றது புதுவதோ வன்றே தண்புனற்பூச எல்லது நொந்து