பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - புறத்திணையியல் களைக வாழி வளவ வென்றுநின் முனைதரு பூசல் கனவினு மறியாது புலிபுறங் காக்குங் குருளை போல மெலிவில் செங்கோ னீபுறங் காப்பப் பெருவிதல் யாணர்த் தாகி யரிநர் சீழ்மடைக் கொண்ட வாளையு முழவர் படையிளிர்ந் திட்ட யாமை மறைநீர் கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை நீர்தரு மகளிர் குற்ற குவளையும் வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தமரும் மெண்புல வைப்பி னன்னாட்டுப் பொருந் மலையி னிழிந்து மாக்கட னோக்க நிலவரை யிழிதரும் பல்யாறு போலப் புலவ ரெல்லா நின்னோக் கினரே நீயே, மருந்தில் கணிச்சி வருந்தவட் டித்துக் கூற்றுவெகுண் டன்ன முன்பொடு மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே.' (புறம் - சஉ] உள்ளியது மூடிக்கும் வேந்தனது சிறப்பும்-நினைத்தது முடிக்கலாகும் வேந்தனது சிறப்பும். உதாரணம்:-- "அங்கை யாயினும் விடுகை யாயினும் நீயளந் தறிவை பின்புரைமை வார்கோற் செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடுந் தண்ணான் பொருமை வெண்மணற் சிதையச் கருங்கைக் கொல்ல னாஞ்செ யவ்வாய் நெடுங்கை கவியம் பாய்தலி னிலையழிந்து வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறுங் கடிமரந் தடியு மோசை தன்னூர் நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப ஆங்கினி திருந்த வேந்தனோ டீக்குளின் சிலைத்தார் முரசங் கறங்க மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே.[புறம் -ஙகூ] இன்னும் 'உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு மென்றதனால் அகத்தர சனை யழித்தது கூறலும் கொள்க. உதாரணம்:- "இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா நெல்லுடைக் அவளமொடு செய்ம்மிகல் பெறாஅ திருந்தரை நோன்வெளில் வருந்த வொற்றி நிலமிசைப் புரளுங் கையவெய் துயிர்த்