பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போருளதிகாரம் - புறத்திணையியல் வானுற வோங்கிய வளைந்துசெய் புரிசை ஒன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கி நின்னிற் றந்த மன்னெயி லல்லது முன்னும் பின்னுநின் முன்னோ ரோம்பிய எயின்முகப் படுத்தல் யாவது வளையினும் பிறிதாறு சென்மதி சினங்கெழு குருசில் பூஉப்புறந் தழீஇப் பொன்பிணிப் பலகைச் குழூஉநிலைப் புதவிற் கதவமே காணில் தேம்பாய் கடாமொடு காழ்கை நீவி வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல் ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி மேம்படு வெல்கொடி நுடங்கத் தாங்க லாகா வாங்குகின் களிறே.' [பதிற்று - ருங] (யக) என்னும் துறையொடு தொகைஇ வகை நால்மூன்று என மொழிப- என்னும் துறையொடு கூடி உழிஞைவகை பன்னிரண்டு என்று கூறுவர். எடு தும்பை தானே நெய்தலது புறனே மைந்துபொரு ளாக வந்த வேந்தனைச் சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப. இது, தும்பைத்திணை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று, இ - ள் :- தும்பை நெய்தலது புறன் - தும்பை என்னும் திணை நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறனாம். மைந்து பொருளாக வந்த வேந்தனை சென்று தலையழிக் கும் சிறப்பிற்று - அது வலி பொருளாகப் போர்கருதி வந்த அரசன்கண் சென்று அவ னைத் தலையழிக்கும் சிறப்பினையுடைத்து. இதனானே "எதிரூன் றல் காஞ்சி" (பிங்க- அநுபோக் - கசஎச] என்பாரை மறுத்த வாறு அறிக. அதற்கு இது புறனாயவாறு என்னையெனின், இருபெருவேந்தரும் ஒரு களத்துப் பொருதலின், அதற்கு இடம் காடும் மலையும் கழனியும் ஆகாமையானும், கள ரும் மணலும் பரந்த வெளிநிலத்துப் பொருதல் வேண்டுதலானும், அந்நிலம் கடல்சார் ந்த வழியல்லது இன்மையானும், நெய்தற்கு ஓதிய எற்பாடு போர்த்தொழிற்கு முடி வாதலானும் நெய்தற்குப் புறனாயிற்று, ['என்ப அசை.] (யஉ) எது. கணையும் வேலுந் துணையுற மொய்த்தலிற் சென்ற வுயிரி னின்ற யாக்கை இருநிலந் தீண்டா வருநிலை வகையோ டிருபாற் பட்ட வொருசிறப் பின்றே. இது, தும்பைத்திணையின் சிறப்பியல் உணர்த்துதல் நுதலிற்று. இது மேனை போல ஒரு பாற்கு மிகுதலின்றி இருவகையார்க்கும் ஒத்த இயல்பிற்றாம்: ஒருவர் மாட் ரும் மிகுதல் இல்லை. இ-ள்:- கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் சென்ற உயிரின் நின்ற யாக் கை வணையும் வேலும் படைத்துணையாக்கொண்டு பொருதல் காரணமாகச் சென்ற உயி 12