பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செரு அகத்து இறைவன் வீழ்வுறச் சினைஇ ஒருவனை மண்டிய நல்லிசை நிலை யும் - பொரு களத்துத் தன்வேந்தன் பட அது கண்டு கறுத்தெழுந்து படைத்தலைவன் வீரனொருவனை நெருங்கிப் பொருத ஒரு நற்புகழ் நிலைமையும், உதாரணம்:-- எனவும், தொல்காப்பியம் - இளம்பூரணம் அரும்பெற லுலக் நிறைய விருந்துபெற் றனராற் பொலிகநும் புகழே. [புறம் - சுஉ.] பல படை ஒருவற்கு உடைதலின் அவன் ஒள்வாள் வீசிய நூழிலும்-பல படை ஒருவற்குக் கெடுதலின் அவன் ஒள்ளிய வாள் வீசிய தாழிலும். அது பலரைக்கொல்லுதல். ['மற்று' அசை.) உதாரணம்:- "வான மிறைவன் படர்ந்தென வாடுடுப்பா மானமே நெய்யா மறம்விறகாத் - தேனிமிருங் கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோன் வாளமர் ஒள்ளழலுள் வேட்டா னுயிர்." [வெண்பா - தும்பை-உசு] GTF.. 66 ஒருவனை யொருவனடுதலுந் தொலைதலும் புதுவ தன்றில் வலகத் தியற்கை இன்றி னூங்கோ கேளலந் திரளரை மன்ற வேம்பின் மாச்சினை நுண்டளிர் நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிடைந்து செறியத் தொடுத்த தேம்பாய் தெரியல் ஒலியன் மாலையொடு பொலியச் சூடிப் பாடின் றெண்கிணை குறங்கக் காண்டக நாடுகெழு திருவிற் பெரும்பூட் செழியன் பீடுஞ் செம்மலு மறியார் கூடிப் பொருது மென்று தன்றலை வந்த புனைகழ லெழுவர் நல்வல மடங்க ஒருதா னாகிப் பொருதுகளத் தடலே" [புறம் - எசு] "வள்ளை நீக்கி யெமீன் முகந்து கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் வேழப் பழனத்து நூழி வாட்டு" [மதுரைக்காஞ்சி - உருரு-எ] எனவும் பல உயிரை ஒருவன் கொன்றதனை நூழில் என்றவாறு அறிக. உளப்பட புல்லி தோன்றும் பன்னிரு துறைத்து - உட்படப் பொருந்தித் தோன் றும் பன்னிரு துறைகளை யுடைத்து, [ஏகாரம் ஈற்றசை.] (Wo) வாகை தானே பாலையது புறனே தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்த லென்ப. இது, வாகைத்திணை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.