'- பொருளதிகாரம் - கற்பியல் என்--னின் கற்பின்கண் தோழி கூற்று நிகழும் இடம் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. பெறற்கரும் சிறப்பு முதலாக மரபுடை பெதிரும் உளப்படப்பிறவும் ஈறாக மொழி யப்பட்டவை யாவும் தோழிக்குரிய வென்று கூடஜார் புலவர் என்றவாறு. பெறற்கரும் பெரும் பொருண் முடிந்தபின் வந்த தெறற்கரு மாபிற் சிறப்பின் கண்ணும் என்பது - பெறுதற்கு அரிய பெரும்பொருளை முடித்த பின்னர்த் தோன்றிய தெறுதற்கரிய மரபு காரணத்தாற் றலைவன் சிறப்பித்துக் கூறுமிடத்தும் தோழி கூற்று நிகழும் என்றவாறு. பெரும் பொருள் ஈண்டு வரைவிற் கேற்றது. தெறுதல்-சுழல நோக்குதல். உதாரணம்:-- "அயிரை பரந்த வந்தண் பழனத் தேந்தெழின் மலர்ந்த தாம்புடைத் திரள்கா லாம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவ ளிடைமுலைக் கிடந்து நடுங்க வானீர் தொழுதுகாண் பிறையிற் றோன்றி யா நுமக் கரிய மாகிய காலைப் பெரிய நோன் றனிர் நோகோ யானே.” (குறுந் - எஅ] என வரும். அற்றமழிவு உரைப்பினும் என்பது--முற்காலத்துற்ற வருத்தத்தின் நீங்கினமை உறினும் என்றவாறு. உதாரணம்:- எரிமருள் வேங்கை மிருந்த தோகை யிழையணி மடந்தையிற் றோன்று நாட வினிதுசெய் தனையா னுந்தை வாழியர் ஈன் மனை வதுவை யயரவிவள் பின்னிருங் கூந்தன் மவரணிர் தோயே.” (ஐங்குறு - 2..ச) எனவரும். அற்றம் இல்லாக் கிழவோற் சுட்டிய தெய்வக்கடத்தினும் என்பது ~*குற்ற மில்லாத தலைமகனைச் சுட்டிய தெய்வக் கடன் கொடுத்தற்கண்ணும் என்றவாறு. உதாரணம்:- நெஞ்சமொடு மொழிகடுத் தஞ்சுவா நோக்குர் தாயவட் டெறுதாக் காக்கவெம் மகனெனச்) சிறந்த தெய்வத்து மறையுறை குன்ற மறைந்து நின் றிறைஞ்சினம் பலவே பெற்றனம் யாமே மற்றதன் பயனே.” “வாழி யாதன் வாழி யவினியே வேந்து பகை தணிக யாண்பெல நந்துக வென்வேட்டோளே யாயே யாமே
- 248-ம் பக்கத்தில் உடுக்குறியிட்ட இடத்தினின்று இதுவரை (இ.
சொ.} தாமே எழுதிச் சேர்த்தது. (பிரதி)--1, கொடுக்கவேண்டு மென்றலாம். 2. மொழி கொடுத்