பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

NEATH தொல்காப்பியம் - இளம்பூரணம் தவேமகற் குற்ற துன்பம் - பரிகரித்தல் தோழி யியல் பாகலின் அவட்குரியதாகும். அறிவு என்றவாறு. அதனானே யன்றே: “பான்மருண் மருப்பி னூல்புரை பாவடி” என்னும் பாலைக்கலியுள், "இழவு 2ரின்ன ரென்னாது பொருடான் பழவினை மருங்கிற பெயர்பு] பெயர் புறையும்”, (கலித் 1. உக) எனக் கூறினாள் என் றுகொள்க. (சக ) 2.ந.சு. உயர்மொழிக் கிளவியு முரியவா லவட்கே, என்-னின், இதுவு மது. உயர்த்துச் சொல்லுங் கூற்றும் உரித்து தோழிக்கு என் றவாறு. "தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாத் தினை நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின் மணங்கமழ் நாற்றத்த மலை தின்று பவிபெறூஉ மணங்கென வஞ்சுவர் சிறுகுடி யோரே”. (கலித் - G2] என்பது உயர்த்துச் சொல்லியவாறு, (சசு) QIF எ. வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்த றாவின் அரிய தத்தங் கூற்றே. என்-னின், வாயில்கட்குரியதோர் மரபு உணர்த்துதல் நூற்று. தத்தங் கூறுபாட்டினான் வாயில்கள் கூறுங் கிளவி வெளிப்படக் கிளத்தல் கேடின்றி யுரிய வென்றவாறு. தத்தங் கூறுவது அவரவர் சொல்லத்தகுங் கூறுபாடு, ஆனுருபு தொக்கு நின் றது. எனவே வாயில்களல்லாத தலைமகளும் நற்றாயும் மறைத்துச் சொல்லப்பெறுவர் என் நவாறு. வருகின்ற சூத்திரம் மறைத்துச் சொல்லு முள்ளுறை சொல்லுகின்றா ராதலின், அவ்வுள்ளுறை வாயில்களை விலக்கியவாறு. - இவர் மறைத்ததனாற்குற்ற மென்னை? இவர் குற்றேவன் முறைமையராதலானுங் கேட்போர் பெரியோர் ஆதலானும் வெளிப்படக் கூறாக்காற் பொருள் விளங்காமையானும் அவ்வாறு கூறினா லிவர் கூற்றிற்குப் பய னின்மையானும் வெளிப்படவே கூறும் என்க. (56) 2ாஙசி. உடனுறை யுவமஞ் சுட்டுநகை. சிறப்பெனக் கெடலரு மரபி னுள்ளுறை யைந்தே. என்-னின், உள்ளுறைபாமாறு உணர்த்துதல் நுதலிற்று. உடனுறையும் உவமமுர் சுட்டும் நகையும் சிறப்பும் எனக் கெடலரு மரபினையுடைய உள்ளுறை ஐந் துவகைப்படும் என்றவாறு (பிரதி)-1. யன்றென . 2. கன்னா.