பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈசுய தொல்காப்பியம் - இளம்பூரணம் பரணம் "எமக்குநயந் தருளினை யாயிற் பணைத்தோ ணன்னுதலலரிவையொடு மென்மெல வியலி வந்திசின் வாழியோ மடந்தை தொண்டி யன்னநின் பண்புபல கொண்டே.” (ஐங்குறு - எடு] இது அவட்பெற்று மலியுர் தலைவன் கூற்று. இனி, "உள்ளப் புணர்ச்சியா னின்றி யியற்கை யிடையீடுபட்டுழி, பின் தலைமகள் குறியிடம் கூறிய வழியதனைப் பாங்கற் குரைத்தற்குச் செய்யுள்:- அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன மணங்கமழ் பொழிற்குறி நல்கினணுணங்கிழைப் பொங்கரி பரந்த வுண்க ணங்கவிழ் மேனி யசையிய லெமக்கே.” (ஐங்குறு - - Nஎச] எனவஞ் சிறுபான்மை வரும். -- காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் மாணிழை கண்ணொவ்வே மென்று.” (குறள் - தாய்ச) இது தலைவியைப் பகற்குறிக்கண் பெற்று மலிதல். மதியு மடந்தை முகனு மறியா பதியிற் கலங்கிய மீன்.” (குறள் - தாயசு) இஃது இரவக்குறிக்கண் தலைவன் அவட்பெற்று மலிந்தது', மாதர் முகம்போ லொளிவிட வல்லையேல் காதலை வாழி மதி.” (குறள் - தாய்க] என்பதும் அது. ஆற்றிடை உறுதலும்-- தான் சேறும் ஆற்றிடை இடையூறு உண்டாய விடத்தும் கூற்று நிகழும். இரட்டுற மொழிவான் வரைவிடைவைத்துப் பிரிந்தான் தான் சேறும் ஆற்றின்கண் வருத்தமுற்றுக் கூறலும் கொள்ளப்படும். குருதி வேட்கை யுருகெழு வயமான். வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கு மரம்பயில் சோலை மலியப் பூழிய ருருவத் துருவி னாண்மேய லாரு மாரி யெண்கின் மலைச்சுர நீளிடை நீநயந்து வருத லெவனெனப் பலபுலந் தழுதனை யுறையு மம்பர வரிவை பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாலை விரிகதி ரிள வெயிற் றோன்றி யன்ன நின் னாய்நல முள்ளி வரினெமக் கேம மாகு மலைமுத லாறே.” (நற்றிணை - 7+உ) இந்நற்றிணைப்பாட்டு தலைவி ஆற்றினது அருமை செப்பத் தலைவன் செப்பியது. "ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின் றூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக் (பிரதி)- 1. இது தொடங்கி சூத்திரவுரையின் இறுதிவரையுள்ளது. (த. மு. சொ-)