பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளதிகாரம் - களவியல்



கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி
மரையின மாரு முன்றிற் .

புல்வேய் குரம்பை நல்லோ ளூரே.” (குறுந் - ௨௱௩௫)

இக் குறுந்தொகைப் பாட்டு தலைவன் வரைவிடைவைத்துச் சேறுவான் கூறியது. (s)

பாங்கர் நிமித்தம் பன்னிரண் டென்ப.

'என்-னின், பலவகை மணத்திற் பாங்கராயினார் துணையாகுமிடம் இத்துணை யென வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று.

பாங்கராயினார் துணையாகக் கூடும் கூட்டம் பன்னிரண்டு வகை யென்றவாறு.

நிமித்தம் என்பது நிமித்தமாகக்கூடும் கூட்டம். அக் கூட்டம் நிமித்தமென ஆகுபெயராய் நின்றது. பாங்கராற் கூட்டம் பாங்கர் நிமித்த மென வேற்றுமைத் தொகையாயிற்று. அவையாவன:-பிரமம் முதலிய நான்கும், கந்திருவப்பகுதியாகிய களவும், உடன் போக்கும், அதன்கண் கற்பின் பகுதியாகிய இற்கிழத்தியும், காமக்கிழத்தியும், காதற்பரத்தையும், அசுரம் முதலாகிய மூன்றுமென இவை. .

முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே.

என்-னின், மேற்சொல்லப்பட்ட பன்னிருவகையிலும் கைக்கிளைப்பாற்படுவன வகுத்துணர்த்துதல் நுதலிற்று. எண்வகைமணத்தினுள்ளு முன்னையவாகிய அசுரம் முதல் மூன்றும் கைக்கிளைப் பாற்படும் என்றவாறு.

... பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே.

என்.-னின்', மேற் சொல்லப்பட்டவற்றுள் பெருந்திணைக்குரியன வுணர்த்துதல் ' நுதலிற்று. எண்வகை மணத்தினுள்ளும் பிரமம் முதலிய நான்கும் பெருந்திணைப் பாற்படும் என்றவாறு. (DF)

முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவலருஞ் சிறப்பி னைந்நிலம் பெறுமே.

என்-னின், மேற் சொல்லப்பட்ட ஒரு தலைக்காமமும் பொருந்தாக்காமமுமன்றி, ஒத்த அன்பின் வருங் கூட்ட முணர்த்துதல் நுதலிற்று. ..

முதல் என்பது நிலமும் காலமும். நிலத்தோடும் காலத்தொடும் பொருந்திய கந்திருவர் பாற்பட்டன (கெடுதலில்லாத சிறப்பினை யுடைய) ஐந்து வகைப்படும் என்றவாறு.

முதலொடு புணர்ந்த வென்றாரேனும் வந்தது கண்டு - வாராதது முடித்தல் [மரபியல் - எஎ) என்பதனால் ஒழிந்த கருப்பொருளும் உரிப்பொருளும் கொள்ளப்படும். நிலம் என்பது இடம். இதனாற் சொல்லியது, ஒத்தகாமமாகிக் கருப்பொருளொடும் புணர்ந்த கந்திருவநெறி இடவகையான் ஐந்துவகைப்படும் என்றவாறு. அவையாவன: - களவும், உடன் போக்கும், இற்கிழத்தி, காமக்கிழத்தி, காதற்பரத்தையும் எனச் சொல் லப்பட்ட ஐவகைக் கூட்டம்.

(பிரதி) - 1.. 'கூட்ட நிமித்தம்.


21