உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருளதிகாரம் - களவியல் ௱௭௫

பெற்றவழி மலியினு மென்பதற்குச் செய்யுள்:— "அம்ம வாழி தோழி பன்மா ணுண் மண் லடைகரை நம்மோ டாடிய தண்ணந் துறைவன் மறைஇ யன்னை யருங்கடி வந்துநின் றோனே.” [ஐங்குறு - ௱௧௫] எனவும்,

“முளைவளர் முதல்வன்” என்னும் அகப்பாட்டினுள், "...........வேட்டோ[ர்]க் கவிழ்தத் தன்ன கமழ் தார் மார்பின் வண்டிடைப் படா[அ] முயக்கமுந் தண்டாக் காதலும் தலைநாட் போன்மே,” [அகம் - ௩௩௨] எனவும், "பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலரே நீர்பரந் தொழுகலி னிலங்கா ணலரே யெல்லை சேறலி னிருள்பெரிது பட்டன்று பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல் யாங்குவந் தனையோ வோங்கல் வெற்ப வேங்கை கமழுமெஞ் சிறுகுடி யாங்கறிந் தனையோ நோகோ யானே.” [குறுந் - ௩௫௫] எனவும், “அம்ம வாழி தோழி நலமிக நல்ல வாயின வளியமென் றோள்கள் மல்ல லிருங்கழி மலரு மெல்லம் புலம்பன் வந்த வாறே.” [ஐங்குறு - ௱௨௰] எனவும் வரும். வருந்தொழிற் கருமை வாயில் கூறியவழித் தலைவி கூறியதற்குச் செய்யுள்:— அருங்கடி யன்னை காவ னீவிப் பெருங்கடை யிறந்து மன்றம் போகிப் பகலே பலருங் காண நாண்விட் டகல்வயற் படப்பை யவனூர் வினவிச் சென்மோ வாழி தோழி பன்னாட் கருவி வானம் பெய்யா தாயினு மருவி யார்க்குங் கழைபயி னனந்தலை வான்றோய் மாமலைக் கிழவனைச் சான்றோ யல்லை யென்றனம் வரற்கே.” [நற்றிணை - ௩௬௫] எனவரும். கூறியவாயில் கொள்ளாக்காலத்துத் தலைவி யுரைத்தற்குச் செய்யுள்:— "கல்வரை யேறிக் கடுவன் கனிவாழை யெல்லுறு போழ்தி னினிய பழங்கைக்கொண்