பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

முன்னுரை.



ந்நூலின் சில பகுதிகள், ஈரோடு தோழர் E. V. ராம சுவாமி அவர்கள் நடத்தி வந்த "ரிவோல்ட்” (Revolt) என்னும் ஆங்கிலப் பத்திரிகையில் ஆரம்பத்தில் வெளி வந்தன. அப் பொழுதே 'குடி அர'சில் மொழி பெயர்த்து வெளியிடக் கருதியும், அது நடைபெறாமல் போய்விட்டது. இது 1929-வது வருஷத்திலாகும்.

பின்னர், மகாத்மா காந்தி அவர்கள் ஆலயப்பிரவேச விஷயமாகத் தீவிர முயற்சி யெடுத்தபோது, இக் காரியத்தைச் சமாளிப்பதற்காகத் திருவிதாங்கூர் அரசாங்கத்தார் அவசரமாக ஒரு கமிற்றியை ஏற்படுத்தினார்கள். அக் கமிற்றியாரது அறிக்கை வெளிவரு முன்னர் இந் நூலை வெளியிட வேண்டுமென்பதாகப் பல நண்பர்கள் கேட்டுக்கொண்டதின் மேல், நானும் அவசரமாகப் பல குறைகளுடன் வெளியிட நேரிட்டது.

வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போதும், அதன் பின்னர், சுசீந்திரத்தில் சத்தியாக்கிரகம் இருமுறை கடந்தபோதும், நான் நேரிற்கண்ட அனுபவங்களை மேற்கொண்டும், ஈரோட்டில் நடை பெற்ற மாகாண சுயமரியாதை மகாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட கமிட்டியார், சுசீந்திரம் சத்தியாக்கிரகத்தைக் குறித்து ரிப்போர்ட்டு செய்யும்படி என்னைக் கேட்டுக் கொண்டதை மேற்கொண்டும், அதற்குப்பின்னர், கோர்ட்டுகளில் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டும் நான் இந்த நூலைத் தொகுக்க நேர்ந்தது.

இந் நூலுக்குத் தோழர் E.V.ராமசுவாமி அவர்கள் ஒரு முகவுரை நல்கியதுமன்றி, வேறு பலவிதமான உதவிகளும் செய்தார்கள்.

இந்நூல் ஆங்கிலத்தில் வெளியானபோது, இந்தியாவிலுள்ள பல பத்திரிகைகளுக்கும் பெரியார்களுக்கும் பரிசீலனை (Review) செய்வதற்காக அனுப்பிக் கொடுத்தேன். இதில் ஒருவராவது