பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ii

 

மாறுபட்ட அபிப்பிராயம் கூறவில்லை. ஆனால் 'ஹிந்து'ப் பத்திரிகையில் கனம் T. R. வெங்கட்டராம சாஸ்திரியார் அவர்கள் நீண்டதோர் வியாசமெழுதிக் கண்டனம் செய்தார்கள்; கோபித்தார்கள். மாப்பிள்ளை அடித்தான் என்று கோபப்படவில்லை; ஆனால், மாமியார் பார்த்துச் சிரித்தாள் என்பதற்குக் கோபித்ததுபோல, சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவன் எழுதினான் என்பதே அவர்களது கோபம்.

பம்பாய் நகரில், உண்மைக் காங்கிரஸ் பத்திரிகையாக நிலவிவரும், 'பம்பாய் கிராணிக்கிள்' (Bombay Chronicle) என்ற பத்திரிகை இப் புத்தகத்தைக் குறித்து நீண்டதோர் மதிப்புரை வரைந்து அடியில் வருமாறு புகழ்ந்திருக்கிறது:-

இந்நூல் அறிவுக்குப் பெரு விருந்து என்பதில் சந்தேகமில்லை. பெரிய ஆராய்ச்சித்திறன் இதற்குச் சிறப்பளிக்கின்றது. இனிய முறையில் போதனை யளிக்கத்தக்கதாக, ஒவ்வொரு அத்தியாயத்திலும் பல முக்கியமான, ஆராய்ச்சிக்குரித்தான விஷயங்கள் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கப்பட்டிருக்கின் றன. . . . . பொதுவாக ஹரிஜன முன்னேற்றத்துக்காகவும், சிறப்பாக, இந்திய சட்டசபை முன்னிருக்கும் ஆலயப்பிரவேச மசோதா குறித்துள்ள பொதுஜன அபிப்பிராயத்தை அறியவும், அவ் விஷயத்தில் பொதுஜனங்களுக்கு வழி காட்டவும், மகாத்மா காந்தி அவர்கள் இப்பொழுதும் தென்னிந்தியாவில் சுற்றுப்பிரயாணஞ் செய்துகொண்டிருப்பதால், இப் புத்தகம் தக்க சமயத்திலேயே வெளிவந்திருக்கின்றது. பொது ஸ்தாபனங்களுடையவும், பொதுஜனத் தலைவர்களுடையவும் அபிப்பிராயங்களைத் தெரிவிக்குமாறு அரசாங்கத்தார் கேட்டிருக்கின்றார்கள். அறிவுக் களஞ்சியமாகவும், தர்க்க சாஸ்திர விருந்தாகவும் விளங்கும் இந்நூல், ஆலயப்பிரவேச மசோதா சம்பந்தமாகத் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களைத்

தெரிவிக்க விரும்புபவர்களுக்கும், இந்திய அரசாங்கத்துக்கும், பேருதவியளிக்கு மென்பதிலையமில்லை. முக்கியமாக அரசாங்க உத்யோகஸ்தர்கள் ஒவ்வொருவரிடமும் இப் புத்தகம் இருக்கவேண்டியது அவசியமாகும். . . . . . . . . . . .