பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

மிக்க கவனமாகவும், சாமர்த்தியமாகவும் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. (பம்பாய் கிராணிக்கிள் 14-1-34)

கல்கத்தா ஸர். . . ராய் அவர்கள் இந்நூலைப் படித்துவிட்டு அடியில் வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:-

'சட்ட விஷயங்கள் சம்பந்தமாகவும், சாஸ்திர விதிகள் சம்பந்தமாகவும் இந்நூலாசிரியர் அடைந்துள்ள அபரிமிதமான ஞானம் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது. இந்நூல் தக்க சமயத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. முன்னேறிச் செல்லும் கருத்துக்களைக் கல்வியறிவு பெற்ற எந்த மனிதனும் எவ்வாறு எதிர்க்கமுடியு மென்பது பற்றி நான் அதிசயிக்கின்றேன். இந்த நூலின்மூலம் ஒவ்வொரு இந்துவுக்கும் ஆலயப் பிரவேச உரிமை உண்டு என்பதை நீங்கள் நிலை நிறுத்தியிருக்கின்றீர்கள்.'

தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் பிரதிநிதியாக வட்டமேஜை மகாநாட்டிற்குச் சென்றிருந்த பம்பாய், டாக்டர் அம்பட்கார் அவர்கள் இந் நூலைக்குறித்து அடியிற் கண்ட அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்கள்:-

'உங்களுடைய நூல் மிகவும் ருசிகரமானதாக இருக்கிறது. ஆலய வணக்கம் எவ்வாறு எப்பொழுது ஏற்பட்டது என்பதைப் பற்றிக் குறிப்பிடும் பாகங்கள் மிகவும் போதனை யளிப்பதாக இருக்கின்றன. . . . . . . . . இந்தியர்களை ஒற்றுமைப்படுத்தல் என்ற பிரச்னையையோ, தீண்டாமையை ஒழிக்கும் பிரச்னையையோ, ஆலய நுழைவு தீர்க்கும் என நான் கருதவில்லை. ஆனால், மேற்குறித்த பிரச்னைகளை அது தீர்க்கும் எனக் கருதுகிறவர்களுக்கு உங்களுடைய ஆராய்ச்சி மிகவும் பயன்படுமென நான் நம்புகிறேன்.'

நான் சைவர்களைப் பற்றிப் பல இடங்களிலும் கண்டித்திருக்கின்றேன். அங்ஙனமிருந்தும், சுவாமி வேதாசலம் அவர்களுக்கும், திரு. கே.சுப்பிரமணியப் பிள்ளை அவர்களுக்கும் இந்நூலை அனுப்பினேன். தமிழுலகில் இவ்விருவரை விட சைவப்பற்றிலும், ஆராய்ச்சியிலும் மேம்பட்டவர் மிகச் சிலரே; மிகச் சிலரும் உண்டோ வென்பது எனக்குச் சந்தேகந்தான்.