பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சுவாமி வேதாசலம் அவர்கள் இந்நூலைப் பற்றி அடியிற்கண்டவாறு எழுதியனுப்பினார்கள்:- 'இந்நூல் காலத்தின் தேவைக் கேற்ற நூலாகும். . . . . . . . இந்த முக்கிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடக் கூடாதா?'

திரு. கே. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் பார்ப்பன வழக்கறிஞர்கள் மலிந்து கிடக்கும் சென்னை மாகாணத்திலிருந்து முதன் முதலாகத் தெரிந்தெடுக்கப்பட்டட தாகூர் சட்ட விரிவுரையாளராகும். இந் நூலைக் குறித்துள்ள அவர்களது அபிப்பிராயம் அடியில் வருமாறு:-

'ஆலயப் பிரவேச உரிமை பற்றிய திரு. ப்பி. சிதம்பரம் பிள்ளை அவர்களது நூல், ஆலய நுழைவுப் பிரச்னை சம்பந்தமாக அழியாப் புகழ்பெறும் நூலாகும். சரித்திர ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் இவ் விஷயம் மிக விரிவாக இந்நூலில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. . . . . . . . . . . மத விஷயத்தில் இந் நூலாசிரியருக்குள்ள அசிரத்தையையும், சாதிப் பெருமைகளிலுள்ள வெறுப்பையும் சிலர் உணரக்கூடும். ஆனால் அவர்கள் தமது ஆராய்ச்சிகளின் முடிபுகளைத் தொகுத்து இந்நூலில் பயன் படுத்தியிருப்பதற்கு இந்து சமூகம் அவர்களுக்குப் பெரிதுங் கடமைப்பட்டிருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.'

இவ்வாறு பல அறிஞர்களால் பாராட்டிப் புகழப்பட்டுள்ள இந் நூலை, ஒரு பார்ப்பன வக்கீல், ஒரு பார்ப்பனப் பத்திரிகையில் கண்டனம் செய்தது ஏன் என்று அறிய ஆசையுடையவர்கள் இப்புத்தகத்தை வாசித்து நான் குறிப்பிட்டிருப்பது சரியல்ல வென்று எனக்குத் தெரியப்படுத்தினால், அதைச் சந்தோஷத்துடன் வரவேற்று இனியொரு பதிப்பு ஏற்படுமாகில் அதில் சரிப்படுத்திக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன். ஏதோ சுயமரியாதைக்காரன் எழுதி விட்டான் என்று கனம் சாஸ்திரியார் அவர்களைப் போல தள்ளி விடாது, உண்மையை அனைவரும் அறிய வேண்டும் என்ற ஆவலுடன் எழுதியிருக்கின்றேன் என்ற உய