பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

ரிய நோக்கத்தோடு இப்புத்தகத்தைப் பார்வையிடும்படி மிக வணக்கத்துடன் கேட்டுக் கொள்கின்றேன்.

பல வேலைகளுக்கும் நடுவே இம்மொழிபெயர்ப்பும் நடைபெற்றது. நாம் நடத்திவரும் 'தமிழன்' பத்திரிகையின் உதவி ஆசிரியர் தோழர் ஏ. சுப்பையா அவர்களது பேருதவியின் பேரில் இந்த நூல் தமிழில் வெளிவந்துள்ளது. அவர்களுக்கு என் வந்தனத்தைச் செலுத்திக் கொள்கின்றேன். இரண்டாவது பாகம் கூடிய சீக்கிரத்தில் வெளிவரக் கூடும்.

நான் முன்னர் வெளியிட்ட ஆங்கில நூலுக்குத் தோழர் ஈ.வெ. ராமசுவாமி அவர்கள் நல்கிய முகவுரையை இதிலும் முகவுரையாகச் சேர்த்திருக்கிறேன். இந்நூலைப் பிரசுரிப்பதில் எனக்கு உதவி புரிந்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.