பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

ஆலயப் பிரவேச உரிமை.


 

அத்தியாயம் 1.

 


'ந்து' என்று சொல்லப்படுகின்றவர் ஒவ்வொருவருக்கும் - அவர் தீண்டத்தக்கவராகவோ தகாதவராகவோ இருப்பினும், அல்லது எந்தச் சாதியிலும் சேர்ந்தவராகவோ, சேராதவராகவோ இருப்பினும் - தம்மைப்போல் கடவுள் வழிபாட்டிற்கு வரும் பிறருக்கு உபத்திரவம் எதுவும் ஏற்படாத முறையில், பொதுக் கோவில்களில் பிரவேசிப்பதற்கும், அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கடவுள் விக்கிரகங்களை வணங்குவதற்கும் உரிமையுண்டு என்பதில் சந்தேகமில்லை. இதில் ஏதாவது கட்டுப் பாடு உண்டானால், தம்மைப்போல் கடவுள் வழிபாட்டிற்குவரும் ஏனையோர்களுக்கு உபத்திரவம் எதுவும் உண்டுபண்ணக்கூடாது என்பதொன்று மட்டுந்தான். சட்டம் இதற்கிடங் கொடுக்கிறது; இதற்கு மாறுபாடாக வேறு சட்டமில்லை. சட்டம் இவ்வாறில்லை யென்று யாராவது சொன்னால் அவருக்கு அதைப்பற்றி ஒன்று தெரியாது என்றுதான் சொல்லவேண்டும்.

பொதுவாக, வழக்கறிஞர்களைப் பழமை விரும்பிகள் என்று மட்டுமல்லாமல் காரணமற்றவர்கள் என்றும் அடிக்கடி சொல்வதுண்டு. அவர்களைக் காரணமற்றவர்கள் என்று சொல்வது முழுமையும் சரியாக இல்லாமற்போனாலும், அவர்கள் கைக்கொண் டுள்ள சட்டம் பகுத்தறிவில்லாதது என்பதற்கு யாதொரு சந்தேகமுமில்லை. மந்திரவாதி தனது ஜால வித்தையைக்கொண்டு பிழைப்பதுபோல, வக்கீலும் தனது சட்டத்தைக் கொண்டு காலங் கழிக்கின்றான்.

சட்டத்தின் நிச்சயமற்ற தன்மையே அதன் பெருமையாகும். அதோடுகூட சட்டம் நியாயமற்றதாகவும், தர்க்க சாஸ்திரத்துக்கு விரோதமாகவுமிருக்கின்றது. முக்கியமாக சாதாரண ஜனங்