பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. 91 மன்னர்களின் உதவியால் சமண பௌத்த கோவில்களெல்லாம் இத்துக்கோவில்களாகமாறின. 10, 11-வது நூற்றாண்டுகளில் புதுக்கோவில்களைக்கட்டவும் ஆரம்பித்தார்கள்; அச்சமயம் சமண மதத்தினரான சிற்பிகளின் ஊழியம் தேவைப்பட்டது. எனவே இவர்களும் சமண மதத்தைவிட்டு இந்து மதத்திற் சேர்ந்தார் கள். ஏற்கனவே பிற சமயத்தைவிட்டு இந்து மதத்திற் சேர்ந் திருந்தவர்களும் பழைய இந்துக்களும் தங்களை உயர்ந்தவர்க ளென மதித்து வலங்கை கொண்டாரெனக் கூறிக்கொண்டார்கள். புதிதாக வந்த சமணர்களை முக்கியமாக சிற்பிகள்- இடங்கை கொண்டார், அதாவது தாழ்ந்தவர்கள் என்றழைத்தார்கள் இந்து மதத்துக்குப்புத்துயிரளிக்க வந்த பெரியார்கள், நெருக்கடியாகக் கோவிற்பணி செய்யவேண்டிய அவசியத்தை யுத்தேசித்து, புதிதாகச் சமணமதத்திலிருந்து இந்து மதத்திற் சேர்ந்த இந்த சிற்பிகளுக்கு, அக்காலத்தில் தென்னாட்டில் மிக உயர்ந்த வகுப் பினராக மதிக்கப்பட்ட ஸ்மார்த்தப் பிராமணர்களையும் ஆதி சைவ பிராமணரல்லாதாரையும்போல பூணூலையும் அணிந்து கொள்ள அனுமதித்தார்கள். இந்தக்காரணத்தினால், சமண சிற் பிகள் மத மாற்ற மடைந்ததும், தங்களை பிராமணர்களென்றும் க்ஷத்திரியர்களென்றுஞ் சொல்லிக்கொண்டதோடுகூட ஆரியர்க ளது பழக்க வழக்கங்களையும் கைக்கொள்ள ஆரம்பித்தார்கள். பழைய வலங்கைகொண்ட வகுப்பினர் இதை ஒப்புக்கொண்டி ருக்கமாட்டார்களாதலால், சமண இடங்கைகொண்டவர்களால் கட்டப்பட்ட கோவில்களையும், விக்கிரகங்களையும் வணங்க மறுத் திருப்பார்கள். எனவே, இருவரையும் திருப்திப்படுத்தும் பொ ருட்டு, இந்த விஸ்வகர்மாக்களுக்கெல்லாம் வலங்கை வகுப்பின் ஸ்தானத்தைக் கொடுத்து, கோவிலுக்குள் வேலை செய்ய விட்டார் கள்; வேலை முடிந்ததும் பழைய வலங்கை வகுப்பினரைத் திருப் திப்படுத்துவதற்காக வெளியே தள்ளிவிட்டார்கள். இதிலிருந்து இந்தப் பழைய வழக்கமானது இன்றும் என் கைக்கொள்ளப்பட்டு வருகின்றதென்பதும் விஸ்வகர்மாக்களுக்கு ஏன் ஆலயப்பிரவேச உரிமை மறுக்கப்படுகின்றதென்பதும் விளங்கும். தற்காலம், இந்து மதத்திலிருந்து முன்னால் கிறிஸ்தவர்களானவர்களுக்கும், பின்