பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

100 ஆலயப் பிரவேச உரிமை. லது இந்த இந்துக்கள் ஒரே மாதிரியான திட்டப்படி சட்டத்தை அமைத்திருக்கின்றார்கள் என்று குறிப்பிட முடியுமா ? அல்லது அதை ஒரு பெருங் கூட்டமான மக்களாவது பின்பற்றி வந்தார் களா? யாராவது அதை அமுலில் கொண்டுவர முயற்சித்தார் களா? அது முன்னர் 'விரிந்து சுருங்குந்தன்மை உடையதாக, இருந்ததா? முன்னர் அது எவ்வாறிருந்தபோதிலும், இப்பொ ழுது 'விரியுந்தன்மையை இழந்து விட்டது' என்பது உண்மை தான். ஆனால், இதற்கும் பிரிட்டிஷாருக்கும் சம்பந்த மெதுவு மில்லை. நாமே நமக்குக் குழி தோண்டி அதற்குள் புகுந்து, அது மிகவும் சௌகரியமாக இருப்பதாக உணர்ந்தோம்; இப்பொழு தும் அவ்வாறே உணர்கிறோம். சாயுச்சிய பதவியை அடைந்து விட்டோம் ! ஆலயப்பிரவேசப் பிரச்னையைப் பொறுத்தமட்டில் 'இந்து' என்ற பதத்திலிருந்தே இந்த சச்சரவுகளெல்லாம் ஏற்பட்டன வென்பதை அடுத்துவரும் அத்தியாயங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். 'இந்துக்கள்' என்று தங்களை அழைத்துக் கொள்வோர் ‘இந்துக்கள்' என்று அழைக்கப்படுகிறவர்கள் - இவர்கள் அனை வருக்கும் ஆலயப்பிரவேச உரிமை வேண்டுமென்று கேட்கப் படுகிறது. இதில் கஷ்டம் ஏற்பட்ட விதம் எவ்வாறு என்பதை ஆராய்வோம்:- (1) கிழக்கிந்திய கம்பெனியார்க்குட்பட்ட ரெவனியூ போர்டுகளின் கீழ் (வங்காளத்தில் 1810-லும், சென்னையில்[817- லும்) ஸ்தல ஏஜண்டுகளே (சாதாரணமாகக் கலக்டர்கள்) (இந்துக் கோயில்களுக்காக விடப்பட்ட நிலங்களிலிருந்து கிடைக்கும் வருமானங்களைச் செலவு செய்து வந்தார்கள்' இந்த இடத்தில் 'இந்து' என்பது யாசென்று விவரிக்கவே யில்லை.