பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

102 ஆலயப் பிரவேச உரிமை. என்ன கருகப்படுகிறதோ அதைப் பின்பற்றுபவர்களும், இந் துச்சட்ட நிபுணர்களின் சாமர்த்தியத்தால் கோவிலுக்கு வெளி யே தள்ளப்பட்டிருக்கிறார்க ளென்பதேயாகும். இதைப்பற்றி இனிமேல் ஆராய்வோம். 18-வது அத்தியாயம். பிரிட்டிஷ் ஸர்க்கார் 1863-ல் இத்துக் கோவில்களின் பரி பாலனத்தை இந்துக்களிடம் ஒப்புவித்தார்களே, அந்த இந்துக் கள் யார்? அவர்கள் பார்ப்பனரா? அல்லது பிராமண, க்ஷத் திரிய, வைசிய, சூத்திரசென்ற ஆரிய வகுப்பினரா? அல்லது திராவிடரா? அல்லது அனாரியரா? அல்லது தென்னிந்தியாவில் தங்களை 'இந்துக்க' ளென்று அழைத்துக் கொள்பவரும், அர சாங்கத்தாரால் 'இந்துக்க' ளென அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற வர்களுமான திராவிட-ஆரிய சமூகங்களைச் சேர்ந்தவர்களா ? வங்காள சட்ட நிபுணரான திரு. ஜே. ஸி. கோஷ் அவர்கள் தமது நாலில் அடியில் வருமாறு குறிப்பிடுகிறார்:- “1863-ம் ஆண்டு 20-வது சட்டமானது. இந்து, மகமதிய மதஸ்தாபனங்களைப் பற்றியதாகும். ஆனால் 'இந்து' வென்பது விவரிப்பதற்குக் கஷ்டமான ஒரு பதமாகும். வாரிஸ் பாத்தி யதை, சொத்துப்பிரிவினை இவற்றைப்பற்றிய இந்துச் சட்டம் சீக்கியர், சமணர், பௌத்தர், பிரம்மசமாஜிகள், மெமான் மகமதி யர், கச்சி, சந்தால் முதலிய பூர்வ ஜாதியினர் முதலியவர்களுக்கும் வழங்கப்பட்டுவருகிறது. ஆயினும் இந்துச் சட்டமானது பூரண மாக மேற்குறித்த வகுப்பினர் ஒருவருக்கேனும் செல்லத்தக்க தல்ல. ஸ்மிருதிகளின்படியுள்ள இந்து கல்யாணச் சட்டத்தை நாயர்கள், சமணர்கள், சீக்கியர், பிரமசமாஜிகள், பூர்வசாதியினர் ஆகியவர்களுக்கு வழங்கமுடியாது; மேலும் இத்துக்களில், பிரா