பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. . 103 மணரைக்கொண்டு கல்யாணச் சடங்குகளை நடத்தமுடியாதவர் களும், விவரகரத்து, புனர்விவாகம். இவற்றைத் தாராளமாகப் பெண்களுக்கு அனுமதிக்கக் கூடியவர்களுமான கீழ்சாதியாரில் பெரும்பாலாருக்கும் இந்தச் சட்டத்தை வழங்கமுடியாது. மனு சொல்லுகிறபடி இந்து வாரிசுச் சட்டம், இந்து விவாகச் சட்டத்தைப் பின்பற்றியதேயாகும். அங்ஙனமிருக்க, ஸ்மிருதி களின்படியுள்ள கல்யாணச் சட்டங்களுக்கு விரோதமான விதி களையுடையவர்களுக்கு இந்து வாரிசுரிமைச் சட்டத்தை எவ் வாறு வழங்கலாம் என்பது விளங்கவில்லை. அது எவ்வாறாயினும், மகமதியர், கிறிஸ்தவர் நீங்கலாகவுள்ள இந்தியர் அனைவருக்கும் இந்துச் சட்டம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இவ்வகுப்பார் களின் மதஸ்தாபனங்களை இந்து மதஸ்தாபனங்கள் என்ற பிரிவின்கீழ் கொண்டு வருவது கஷ்டமான காரியமாகும். நாயர் களைப் பொறுத்தமட்டிலும், அவர்கள் இந்துப் பழக்கவழக்கத் துக்கு மாறுபட்ட கல்யாணச் சடங்குகளையும், வாரிசுரிமைச் சட்டங்களையும் கொண்டிருந்த போதிலும், அவர்கள். இந்து தெய்வங்களையே வழிபடுகிறார்கள். ஆகையினால், மற்ற விஷ யங்களில் அவர்களுக்கு வேண்டிய சட்டமானது இந்துச் சட் டத்தினின்றும் வேறுபட்டிருந்த போதிலும், மதஸ்தாபனங் களைப் பொறுத்தவரையில் இந்துச் சட்டமானது அவர்களுக் கும் பொருத்தமுடையதுதான்; அவ்வாறே ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது. 1817-ம் ஆண்டு 7-வது ரெகுலேஷன்படி ரெவனியூ போர்டுகளுடைய ஆதிக்கத்தின் கீழ் மலையாளத்தி லுள்ள பல நாயர். கோவில்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. சில சீக்கியர்களும் இந்துக் கடவுள் களை வணங்குகிறார்கள். ஆனால், அவர்களில் முக்கியமானவர்கள் விக்கிரக ஆராதனையைப் பூராவாக விட்டுவிட்டபடியால், இந்துமத தர்ம பரிபாலனச் சட்டம் அவர்களையுங் கட்டுப்படுத்துமெனக் கருதமுடியாது. எனினும், 1863-ம் ஆண்டு 20-வது கட்டம் சீக்கிய மதஸ்தா பனங்களையும் கட்டுப்படுத்துமெனக் கொள்ளப்பட்டிருக்கிறது. சமணர்களும் இந்துமதத் தெய்வங்களை வணங்குவதில்லை; எனி னும், இந்தச் சட்டமானது சமண மத ஸ்தாபனங்களையும் கட்