பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலயப் பிரவேச உரிமை

3


 

வதுண்டு. ஒருதலைப் பட்சமாகத் தோன்றிய பொய்ச் சாட்சியத்தைச் சுயநலத்தைக் கருதி ஞாபகமூட்டுவது என்பதுதான் இதன் அர்த்தமாகும். இறுதான் பழக்கவழக்கம்.

ஆனால் வக்கீல் சரியான மனோநிலையிலிருக்கும்போது கேட்டால், பொதுக்கோவில், பொது ரஸ்தா இவைகளைப் பற்றிய விஷயத்தில் ஞாபகத்துக்கு எட்டக்கூடிய அல்லது எட்டாத பழக்க வழக்கத்தைக் குறித்து விசாரணை செய்யவேண்டிய தேவையே யில்லையென்று சொல்வார். அது ஒரு பொதுக் கோவிலாகவோ, ரஸ்தாவாகவோ இருந்தால், எவ்வாறு அல்லது ஏன் அந்தக் கோவில் பொதுவாயிற்று என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்வது சரித்திரக்காரரைப் பொறுத்த விஷயமேயன்றி வழக்கறிஞனையோ, நீதிபதியையோ ஒரு பொழுதும் பொறுத்ததல்ல. இத்தகைய கஷ்டமான ஆராய்ச்சியிலிறங்க வழக்கறிஞரும் நீதிபதிகளும் ஆயத்தமாயில்லை.

ஒரு கோவிலில் நடைபெற்றுவரும் தற்கால முறையிலிருந்து 'பழக்கவழக்க'த்திலிருந்து, அந்தக் கோவிலை 'அமைத்தவரின் உத்தேசம்' என்னவென்பதை அனுமானிக்கலாமென பெயர்பெற்ற நீதிபதிகள் சில சமயங்களிற் சொல்லுகின்றார்கள். இது, முழுத் தவறுதல் ஆகும். பொதுக்கோவில்கள் சம்பந்தப்பட்ட வரையிலும் இந்த அபிப்பிராயம் சரியானதல்ல.

ஒருக்கால், ஒரு சாதியாரால் அல்லது ஒரு வகுப்பாரால் ஏற்படுத்தப்பட்ட கோயில்களுக்கு இது பொருத்தமாகவிருக்கலாம்; ஆனால் பொதுக்கோவில்களுக்கு இது பொருத்தமாகாது. ஸ்மார்த்தப் பிராமணர்கள், தாங்களாகத் தங்கள் சாதிக்காக முன் காலத்தில் ஒரு கோவிலைக் கட்டினதாக வைத்துக் கொள்ளுவோம். ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு, அந்தக் கோவிலை 'அமைத்தவரின் நோக்கம்' என்னவென்பதாகத் தீர்மானிக்க வேண்டிய அவசியம் நேரிட்டால், கடந்த வருடங்களில் நடந்துவந்ததிலிருந்தும், இப்பொழுது நடந்து வருவதினின்றும், அது அக்காலத்தில் எவ்வாறிருந்திருக்குமென ஓரளவு ஒருவேளை அறியக்கூடும். இது பகுத்தறிவுக்குப் பொருத்தமாகவும், யாரும் உணரக்கூடிய நிலை