பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

ஆலயப் பிரவேச உரிமை.



 

யிலுமிருக்கின்றது. ஸ்தாபித்தவரின் 'உட்கருத்தை'க் கண்டு பிடிக்குமுன், கோவிலை 'ஸ்தாபித்தவர்' யார் என்பதை நாம் திட்டமாக அறிந்துகொள்ளவேண்டுமல்லவா? சுருங்கச் சொல்லுமிடத்து, ஒரு கோவிலை 'ஸ்தாபித்தவர்' இன்னார் என்பதையே அறியாமலிருக்கும்போது, அவரது 'உத்தேசத்தையோ' அல்லது அந்தக்கோவிலின் பழக்கவழக்கத்தையோ குறித்து விசாரணை செய்ய இடமில்லை.

உதாரணமாக, ஒரு காலத்தில் தென்னாட்டுச் சமண மன்னர் ஒருவரால் ஸ்தாபிக்கப்பட்ட சமணக்கோவில் என்று மிகத் திட்டமாகத் தெரிந்த கோவிலை இன்று பார்ப்பனரும் பார்ப்பனரல்லாத உயர் சாதி இந்துக்களும் கொண்டாடிவருகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்நிலையில் இந்தக்கோவில் விஷயமாகத் தற்காலம் நடைபெற்றுவரும் 'பழக்கவழக்க'த்தைக் கொண்டோ, இதற்குமுன் நெடுங் காலமாக நடை பெற்றுவந்ததாகக் கருதக்கூடிய இடைக்காலப் பழக்கவழக்கத்தைக்கொண்டோ, எந்த நீதிபதியும் — அவர் எவ்வகுப்பையோ, சாதியையோ சேர்ந்தவராக இருப்பினும், அல்லது அவர் எவ்வளவு உயர்ந்த அறிவாளியாயிருப்பினும் - சரியான முடிவுக்கு வரமுடியாது. அதாவது, இன்றையதினம் ஒரு இந்துப் பொதுக்கோவிலை யாரெல்லாம் பரிபாலனஞ் செய்துவருகின்றார்களோ, அவர்கள் எந்த சாதியினர் என்பதிலிருந்து, அந்தக்கோவிலை ஸ்தாபித்தவர் யாரென்பதைக் கண்டுகொள்ளமுடியாது என்பதாகும். இதற்கு உதாரணமாக நாகர்கோவிலைச் சொல்லலாம்.

நாகர்கோவில் நகரத்துக்குப் பெயரளிக்கும் இந்தக் கோவிலானது கடந்த இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் வரையிலும் நாகராஜாவுக்குக் கட்டப்பட்ட "மிக முக்கியமான சமணக் கோவிலாகவேயிருந்துவந்தது'. அதற்குப் பின்னால் அது "தோற்றத்திலும், வழிபாட்டு முறையிலும் திட்டமாக இந்துக் கோவிலாக மாறிவிட்டதெனத் தெரிகிறது" என்று துரைத்தன சிலாசாசன ஆராய்ச்சியாளர் கூறுகின்றார்.