பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலயப் பிரவேச உரிமை.

5



 

சமீபகாலம் வரை சமணகோவில் பூசாரிகளுக்குச் சொந்தமான இரு சமண வீடுகள் இந்தக் கோவிலின் தென்புறத்திலிருந்து வந்தன. நாகர்கோவில் ஒருகாலத்தில் ஏராளமான சமணர்கள் குடியேறியிருந்திருக்க வேண்டும் என்று இதினின்றும் தெரிய வருகிறது. மேல் குறிப்பிட்ட இரண்டு வீடுகளிலும் வசித்து வந்த ஆடவர்கள் இறந்துபோகவே, பூசாரி வீட்டுப் பெண்கள் தங்கள் சுற்றத்தாரிடம் ஓடிவிட்டதாகவும், உடன் பூசாரிவீட்டு மடங்களை நம்பூதிரிப் பார்ப்பனர்கள் கையில் ஒப்படைத்ததாகவும், சமணக் கோவிலை இந்துக் கோவிலாக மாற்றினதாகவும், அப்பொழுது பார்ப்பனர்களும், மற்ற ஜாதியினரும் அந்தக் கோவிலைச் சுற்றிக் குடியேறினதாகவும், சரித்திர ஆராய்ச்சிமூலம் தெரியவருகின்றது. கடைசியாக இந்த இந்துக்கோவில் திருவிதாங்கூர் ஸர்க்கார் ஆதீனத்திலும் வந்து 'இந்து'க் கவிலாகவே யிருந்து வருகிறது. சமணப் பூசாரிகளுடைய - வீடுகளிருந்தவிடத்தில் நம்பூதிரிப் பூசாரிகளுக்காகத் தனி வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. இன்றளவும் உயர்சாதி இந்துக்கள் மட்டுமே இந்தக் கோவிலுக்குள் பிரவேசிக்கலாம். எனினும், இந்தக் கோவிலுக்குள்ளிருக்கும் சமணக் கடவுள் ஆணா பெண்ணா நாகராஜனா, நாகரம்மனா என்பதைப் பற்றி அங்குச் சென்று வழிபடும் இந்துக்கள் இதுவரை முடிவு செய்யவில்லை.

சமணர்கள் சாதியற்றவர்கள். சாதியற்ற சமணர்கள் வசித்து வந்த இடம் பிராமண அக்கிரகாரமாக மாறிவிட்டது. இதோடு நிற்கவில்லை 1918- வருஷம் யுத்த சமாதான விழா (Armtice Day Celebration) கொண்டாடும் பொருட்டு, யானைமீது சக்கிரவர்த்தியின் உருவப்படத்தை வைத்து ஜில்லா மாஜிஸ்திரேட் முதலிய உத்தியோகஸ்தர்களும், மற்ற பிரமுகர்களும் ஊர்வலம் வந்தபோது, சாதிபேதமற்ற சமணர்கள் முன்காலத்தில் வாழ்ந்தவிடத்தில் தோன்றிய இந்த பிராமணர் வீதியில் நுழைய முயலவும், ஊர்வலத்தில் தீண்டாதவர்களுமிருக்கின்றார்களென்ற காரணத்தால் பார்ப்பனர்கள் ஊர்வலத்தைத் தடுத்தார்கள். ஊர்வலம் நடைபெறவில்லை. உத்தியோகஸ்தர்களும், மற்றவர்களும் அவரவர் வீடுபோய்ச் சேர்ந்தனர். ஊர்வலத்தில் கலந்துகொண்ட நாடார் குலத்தைச்