பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

ஆலயப் பிரவேச உரிமை.

 

சேர்ந்த கிறிஸ்தவர்கள் பெரிய பட்டங்கள் பெற்று உயர்ந்த பதவிகளை வகித்தபோதிலும், அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்தாமென எண்ணியே பார்ப்பனர் அவ்வாறு தடுத்தனர். சாதிபேதமற்ற சமணர்கள் ஒரு காலத்தில் வசித்துவந்த இடமல்லவா!

இந்நிலையில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சமணக் கோவிலை இந்துக் கோவிலாகவும், சமணர் வசித்துவந்த வீதிகளைப் பார்பனரும் உயர்சாதிக்கார்ரும் வசிக்கும் கிராமவீதிகளாகவும் மாற்றி, தாழ்த்தப்பட்டவர்கள் - இந்துக்களானாலும் சரி, கிறிஸ்துவர்களானாலும் சரி (முஸ்லீம்களாக மாறிவிட்டால் தடையொன்றுமில்லை) - இந்துக் கோவிலுக்குள்ளும், அதைச் சுற்றியுள்ள வீதிகள் வழியாகவும் போகாதபடி தடை செய்யப்படுகின்றார்களென்பதாகும்.

இவ்விதம் வேண்டுமானால் இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளாக நடந்துவருவதாக வைத்துக் கொள்ளலாம். எனவே இப்பொழுது நடப்பிலிருக்கும் பழக்க வழக்கத்தைக் கொண்டு மட்டும் இந்தக் கோவில் இந்துக்கோவில் என்றோ, இந்தப் பூசாரிமடம் இந்துக்கள் மடமென்றோ, இந்த வீதிகள் பார்ப்பனர் வீதிகளென்றோ ஏற்பட நியாயமில்லை. சரித்திர ஆராய்ச்சியினால் இவ்வுண்மை வெளிப்படுகின்றது. ஆனால் கோர்ட்டில் வழக்கு ஏற்படும்பொழுது சரித்திர ஆராய்ச்சிக்கு அங்கு இடமில்லை, பழக்க வழக்கத்தையே பார்க்கின்றார்கள்.

ஆகையினால் ஒரு பொதுக் கோவிலின் ஸ்தாபன விஷயமாக ஒன்றுந் திட்டமாகத் தெரியாமல் இருக்கும்போது, அதை ஸ்தாபித்தவர் யார்? எப்பொழுது ஸ்தாபிக்கப்பட்டது? அவரது சாதி மதம், கொள்கையென்ன? அவரது உத்தேசத்தை விளக்கும் அறிகுறியேதேனும் விட்டு வைத்திருக்கிறாரா? அவர் ஒரு அரசரா? அல்லது குடியானவரா? அரசராயிருந்தால் பொதுஜனங்களுடைய பணத்தைச் செலவிட்டு ஸ்தாபித்தாரா? குடியானவராயிருந்தால் சமுதாயத்தார் அல்லது ஊரார் பணத்தைச் செலவிட்டாரா? இவற்றைப் பற்றியெல்லாம் ஒன்றுந் தெரியாமலிருக்கும் போது 'பழக்க வழக்கத்தை'க்குறித்து ஆராய்ச்சி செய்வதும் தீர்ப்புச்