பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

ஆலயப் பிரவேச உரிமை.



 

யாகத் தோன்றலாம்; எனினும், இக்கோயில்களை ஸ்தாபித்த பெரியார்களின் பரந்த நோக்கம் இப்படித்தான் இருந்தது அல்லது இருந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

 

 

அத்தியாயம் 2

 

சென்னை தர்ம ரெக்ஷண சபையைச் சேர்ந்தவரும், 'மத ஸ்தாபனங்கள்' என்ற நூலை இயற்றிய பேராசிரியருமான ப்பி.ஆர். கணபதி ஐயரவர்களே இந்துக் கோவில்களெல்லாம் சர்வதேச சாதிமத சமரஸத் தன்மையுடையன (Cosmopolitan) என்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். 'கிறிஸ்தவ ஆலயங்களையும், ஆங்கிலக் கோவில்களையும் போலல்லாமல், இந்துக்களுடைய ஆலயங்கள் அவர்களுடைய மதத்தைப் போலவே சர்வதேச, சாதிமத சமரஸத் தன்மையுடையவையா யிருக்கின்றன. கிறிஸ்தவ ஆலயங்களிலும், ஆங்கிலக் கோவில்களிலும் அந்தந்த இடங்களில் வசிப்பவர்கள் மட்டுமே தொழுவதற்கு உரிமையுண்டு; அவர்கள் அவ்வாறு தொழுவதற்குக் கடமைப்பட்டுமிருக்கிறார்களெனவுந் தோன்றுகிறது' என்று திரு. கணபதி ஐயரவர்கள் கூறினபோதிலும் அவரது சர்வதேசாபிமான சமரஸத் தன்மை கொஞ்சம் குறுகியதாகவே காணப்படுகிறது. ஏனெனில், அவரே 'நான்கு சாதிகளையுஞ் சேர்ந்த இந்துக்களனைவர்க்கும் யாதொரு தட்டுத் தடையுமின்றி இந்துக் கோவில்களில் நுழைந்து வணங்க உரிமையுண்டென்பது வெளிப்படை'யென முடிக்கின்றார். இதுதான் அவரது சர்வதேசாபிமான சமரஸத் தன்மை! இதைப்பற்றி அதிகமாகப் பின்னால் கூறுவோம்.

சென்னை ஹைக்கோர்ட்டில் முதலாவது இந்தியன் ஜட்ஜியாகவிருந்த காலஞ் சென்ற ஸர் டி. முத்துசுவாமி ஐயரவர்கள் 'இந்துக் கோவில்கள், சில குறிப்பிட்ட பழக்க வழக்கங்களை ஒப்புக்கொள்ளும் சாதியார்களுக்காகவும், இந்து சமுதாயப் பிரிவினர்களுக்காகவும் ஸ்தாபிக்கப்பட்டுப் பரிபாலிக்கப்பட்டுவரும் ஸ்தாபனங்காகும்' என்று அபிப்பிராயப்பட்டுள்ளார். இதிலிருந்து அவரு