பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலயப் பிரவேச உரிமை.

9

 

டைய திட்டமான கருத்து என்னவென்பது நமக்கு வெளிப்படையாக விளங்கவில்லை. ஆனால் மற்றோரிடத்தில், மகமதியர், கீழ் சாதிக்காரர்கள் முதலியோர்களுடைய நன்மைக்காக இந்துக் கோவில்கள் ஸ்தாபிக்கப்படவுமில்லை, பரிபாலிக்கபடவுமில்லை' யென்று அவர் சொல்லியிருப்பதிலிருந்து அவரது கருத்து தெளிவாகின்றது.

அவருடைய அபிப்பிராயத்தைப் பரிசீலனை செய்யப்புகுமுன் ஒரு ஜட்ஜியென்ற நிலைமையில் அவரது பொது மனப்பான்மை என்னவென்பதைக் குறித்துக் கவனிப்போம்.

'ஸர்.டி. முத்துசுவாமி ஐயரவர்கள் எப்பொழுதாவது ஒரு தூக்குத் தண்டனையை ஸ்திரப்படுத்தும்படி நேரிட்டால், வீடு சேர்ந்ததும் அவர் பிராயச்சித்தஞ் செய்துகொள்வார் என்று சொல்லப்படுவதுண்டு. ஒரு சமயம் அவரது வைதீகக் குருக்களுக்கு ஒரு கிரிமினல் வழக்கில் இருநூறு ரூபாய் அபராதம் போடவேண்டி வந்தது. ஜட்ஜி அவர்கள் வீடு சேர்ந்ததும், குருவுக்கு ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதி அதோடு இருநூறு ரூபாயும் அனுப்பிவைத்தார். இவ்வாறு இப்பெரியார், தான் ஒரு இந்துவென்ற ரீதியில் மதபக்தியுடனும், நீதிபதி யென்ற முறையில் மனச் சாட்சிக்கு விரோதமில்லாமலும், சிஷ்யன் என்ற அளவில் பயபக்தியுடனும் தமது கடமையைச் செலுத்திவந்தார்' என்று அவரை புகழ்ந்துரைக்கும் ஒருவர் எழுதியிருக்கிறார்.

நாலாவது ஹென்ரி அரசர் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை விக்மோர் என்பவர் குறிப்பிடுகிறார். சாட்சியத்தைக் கொண்டு ஒரு ஜட்ஜி ஒரு கைதியைத் தண்டித்தார்; ஆனால் தமது சொந்த அறிவில் அவன் குற்றவாளியல்லவென்று தெரிந்ததால் அரசரிடம் முறையிட்டு அவனை மன்னிக்கும்படி செய்தார். 'ஒரு வழக்கில் சொந்த அனுபவத்தை உபயோகிக்கததால் அதன் முடிவு எவ்வளவு அசம்பாவிதமாகப் போய்விடக்கூடுமென்பது இந்த சம்பவத்தினின்றும் விளங்குகின்றது. கிராம்ப பஞ்சாயத்தார்களை நீதிபதிகளாக நியமிக்கவேண்டுமென்று இதனாலேயே நாட்டில் கிளர்ச்சி செய்யப்படுகின்றது. வழக்கைப் பற்றியும், சாட்சிகளின்