பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

ஆலயப் பிரவேச உரிமை.

 

குணங்களைப் பற்றியும் தங்களுக்கு நேராகத் தெரிந்தவற்றை அவர்கள் தீர்ப்புக்கு உபயோகப்படுத்த முடியுமல்லவா? ஆனால் ஒரு நீதிபதி தமக்குத் திட்டமாகத் தெரிந்த ரகசிய விஷயங்களையாவது உபயோகித்துக் கொள்ள அனுமதிக்கப்படவேண்டியது அவசியம்; கட்சிகளிடம் தாம் அறிந்த விஷயங்களைச் சொல்லி, அவர்கள் ஆட்சேபிக்காதிருந்தால் மட்டுமே அவர் விசாரணைசெய்து தீர்ப்புச் சொல்லலாம்' என்று ஜஸ்டிஸ் சதாசிவ அய்யரவர்கள் மற்றொரு சென்னைக் கேஸில் குறித்துள்ளார்.

நீதிமுறைப்படியும், பட்சபாதமின்றியும், மனச்சாட்சிக்கு நேர்மையாகவும் நியாயம் வழங்கவேண்டிய நீதிபதியென்னும் உயர்பதவி வகித்த ஜஸ்டிஸ் முத்துசுவாமி ஐயரவர்கள், ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பதினிமித்தம் மதக் கோட்பாடுகளைத் தாம் மீறிவிடுவதாகக் கருதி இந்துமதக் கொள்கைப்படி அதனாலேற்படும் பாவத்தைப் பிராயச்சித்தத்தின் மூலம் நிவர்த்தித்துக் கொண்டார். இதிலிருந்து அவர் தமது நீதிபதியென்ற உத்யோகத்தையும், மதத்தையும் பற்றி எவ்வாறு விசித்திரமான அபிப்பிராயங் கொண்டிருந்தாரென்பது வெளிப்படையாகும்.

இனி, தாழ்த்தப்பட்டவர்கட்காகவும், தீண்டாதார் முதலியோர்கட்காகவும் இந்துக் கோவில்கள் ஸ்தாபிக்கப்படவில்லையென்று கூறிய ஜஸ்டிஸ் முத்துசுவாமி ஐயரவர்களுடைய தீர்ப்பைக் கவனிப்போம். இதை நான் மறுக்கின்றேன். முதலாவது இவ்விதமாக இப்பெரியார் திருவாய் மலர்ந்தருளினதற்கு யாதொரு ஆதாரமுமில்லை. ஒருக்கால் ஸ்மார்த்த பார்ப்பனர்களால் ஸ்தாபிக்கப்பட்டதென்று ருசுப்பிக்கப்பட்ட கோவில் சம்பந்தப்பட்டவரையிலும் இக்கூற்று உண்மையாயிருக்கக் கூடும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்; ஏனெனில் அவர்களுடைய குறுகிய மனப்பான்மையையும், மக்களைப் பிளவுபடுத்தும் மதக்கோட்பாட்டையும், ஆரிய சாதிப் பாகுபாட்டின் இழிவான தன்மையையும், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களுடைய போலித் தன்மையையும், ஆரிய தெய்வங்களை மட்டும் பிரதிஷ்டை செய்வதையும், வேதங்களை மாத்திரம் பாராயணம் பண்ணுவதையும் இவைபோன்ற பலவற்றையும்