பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 20 ஆலயப் பிரவேச உரிமை. தென்று யாரேனும் சொன்னால், அவன் அந்த இடத்திலேயே கொடிய ராஜத்துரோகக் குற்றஞ் செய்தவனாகக் கருதப்பட் டிருப்பான். சண்டாளர்முதல் பிராமணரீறாகவுள்ள அனைவரும் கோவி லுக்குள் போய் வணங்கி, தம்மாலியன்ற பொருளை அரசனுக்குக் கொடுக்கும்படி செய்வதே அரசர்களின் கொள்கையாக இருந்தது. அல்லது இருந்திருக்கவேண்டும் என்பது இந்தக் கோவில்களின் உற்பத்தியினின்றும் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. பார்ப்பான் விஷயத்தில்கூட யாதொரு வித்தியாசமும் பாராட்டவில்லை.அதா வது, ஒவ்வொருவரும் கோவிலுக்குள்போய்வணங்கி அதற்காகப் பொருளும் கொடுக்கவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்பட்டிருப் பார் என்பதாகும். அத்தியாயம் 4. கோயில்கள் அரசாங்க ஸ்தாபனங்களாக இருந்தன; ஏதே னும் ஒரு ஸ்தாபனம் 'பொதுச் சொத்து' என்று சொல்லக்கூ டியதாக இருந்திருந்தால் அது இந்தக் கோயில்களாகும். இப்பொ ழுது உயர் சாதி இந்து வக்கீல்கள் கோயில்களைப் 'பொது ஸ்தா பனங்கள்' என்று சொல்லும்போது ஒரு புதுமாதிரியான விசேஷ அர்த்தத்துடன் சொல்லுகின்றார்கள். "பிரதம திருஷ்டியில், நான்கு ஜாதியாருக்கும் தட்டுத்தடையின்றி இக்கோயில்களில் பிர வேசித்து வழிபட உரிமையுண்டு" என்பது இவர்கள் கூற்றாகும். கோயில்களையும், தெய்வங்களையும் ஸ்தாபித்தவர் பார்ப்பனர்கள் அல்லவென்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். "வேதங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரிய மதத்தில் விக்கிரக ஆராதனையில்லை. இது பின்னர் தோன்றிய இழிவுபட்ட ஆராதனையாகும்" என்று காலஞ் சென்ற மாக்ஸ் முல்லர் என் னும் உகலப்பிரசித்திபெற்ற மேனாட்டு ஆசிரியர் கூறுகின்றார்.