பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. 21 வங்காள தேசத்துப் பிரபல வழக்கறிஞரான மிஸ்டர் ஜே. ஸி கோஷ் தமது தாகூர் சட்டப் பிரசங்கத்தில் அடியில் வருமாறு குறிப்பிடுகிறார்:- "மக்கள் யாகம் முதலியவற்றை நடத்திவந்த காலத்தில் கோ யில்களையும் விக்கிரகங்களையும் ஸ்தாபிக்கவேண்டிய அவசியம் ஏற் படவில்லை. பிராமணர்கள் மட்டுமே அக்கினியை வளர்க்கலாம். இதனால்தான் அவர்களை "அக்கினி ஹோத்திரிகள்" என்றழைத் தார்கள். மற்ற சாதியாரும் உயர்ந்தபோது, அவர்கள் வழிபடத் தெய்வங்கள் வேண்டியதாயிற்று. பிராமணரது ஆதிக்கம் குறை யவும், அக்கினி வணக்கம் தனது செல்வாக்கை இழந்தது; இதி லிருந்து விக்கிரக வணக்கம் ஆரம்பமாயிற்று. இந்த விக்கிரக் ஆராதனை, ஆரியர் வருமுன் இந்தியாவில் இருந்தவர்களிடமிருந் தும், பழங் குடிகளான திராவிடர்களிடமிருந்தும் கடன் வாங்கப் பட்டிருக்கவேண்டும். புத்த விக்கிரகங்களையும், ஸ்தூபிகளையும் ஸ்தாபித்து புத்த மதத்தினர் வழிபடவாரம்பித்தது, இந்துக் கோ யில்களையும், விக்கிரகங்களையும் ஸ்தாபிப்பதற்குத் தூண்டுகோ' லாயிற்று.' பணகுடி கோயில் வழக்கில் ஜஸ்டிஸ் சதாசிவ ஐயரவர்கள் அடியில் வருமாறு தமனு தீர்ப்பில் குறிப்பிட்டார்:- "விக்கிரக ஆராதனையை (சாஸ்திரங்கள்) எல்லாச் சாதியார் களுக்கும் எவ்வித வித்தியாசமுமின்றி வகுத்திருந்தபோதிலும், அது அவ்வளவு உயர்ந்த கடவுள் வழிபாடல்லவென்பதாகவும் தெளிவாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அக்கினி,சூரியன் இவற் றின் மூலமாக வழிபடுவதே பிராமணர்களுக்கு உரித்தானதென் றுங் கொள்ளப்பட்டது. "ஆதியில் பொதுஜன உபயோகத்திற்காகவே விக்கிரக ஆரா தனை ஏற்படுத்தப்பட்டதென சாஸ்திரங்கள் கூறுகின்றன. புத்த மத உணர்ச்சி இந்தியாவில் விக்கிரக ஆராதனையின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாயிருந்தது. புத்தர்பெருமானை வணங்கும்பொ ருட்டு அவரது ஞாபகச் சின்னங்கள்மீது எழுப்பப்பட்ட ஸ்தூபி