பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 22 ஆலயப் பிரவேச உரிமை. களிலிருந்து பெளத்த கோவில்கள் தோன்றின" என்று மற் றொரு கேஸில் அவர் கூறியிருப்பதோடு "விக்கிரக ஆரா தனை பொதுமக்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டதென்பது தெளிவா கின்ற" தென்றும் குறிப்பிட்டுள்ளார். "புத்தமதக் கோயில்களைப் பின்பற்றி இந்துக் கோயில்களும், பௌத்த 'விகாரங்களைப் பின்பற்றி இந்து மடங்களும் பிற ஸ்தா பனங்களும் எழுந்தன. எந்த முறையிற் செய்யப்பட்ட தர்மங்க ளும் மத சம்பந்தமானவையென்றே கருதப்பட்டன. மனிதனுக் கும், விலங்கினுக்கும் ஏற்படும் கஷ்ட நிவாரணத்துக்கும், துறவி கள், சந்நியாசிகள் இவர்கள் கூடுவதற்கும் தானங்கள் வழங்கப் பட்டன. இவையெல்லாம் மத தர்மங்கள்; பொதுச் சொத்துக்கள். இந்து மதம் புத்துயிர்பெற்றெழுந்தபோது தயாளகுணமுடைய வியாபாரிகளும், பிரபுக்களும்,அரசர்களும் ஏராளமான மடங்களை ஸ்தாபித்து நடத்திவந்தார்கள். பொதுமக்களனைவரும் வழிபடும் பொருட்டு அரசர்களும் தனவந்தர்களும் பெரிய கோயில்களைக் கட்டினார்கள். இப் பெரிய கோயில்களின் சமீபம், ஜனங்கள் தங் கள் குடும்ப தேவதைகளைப் பிரதிஷ்டைசெய்து, அவற்றிற்குப் பூஜைகளையும் ஏற்படுத்திச் சொத்துக்களும் விட ஆரம்பித்தார்கள். இந்தக் குடும்ப தேவதைகளும்,இச் சொத்துக்களும் தனிப்பட்ட மனிதர்களுக்கு மட்டும் சொந்தமான தனிச் சொத்துக்களாக இருந்தன" என்று திரு. ஜே. ஸி. கோஷ் அவர்கள் கூறுகின்றார். மேற்குறிப்பிட்ட பீடங்களும், விக்கிரகங்களும், ஆலயங்க ளும் பார்ப்பனரல்லாத ஏனையோரால் ஏற்படுத்தப்பட்டவைகளா கும். இந்தியாவின் பூர்வீகக் குடிகளுள்படப் பொதுமக்களனைவ ருடையவும் உபயோகத்திற்காகவே இவை ஆதியில் ஏற்படுத்தப் பட்டன. இதில் சாதி வித்தியாசமோ, தீண்டாமை வித்தியாச மோ யாதொன்றுங் கிடையாது. சரித்திரம் இதை மெய்ப்பிக்கின் றது. முற்கால அரசர்கள் தங்கள் லாபத்தைக் கருதி ஆலய வழி பாட்டுக்கு உற்சாகமளித்தார்கள் என்றுந் தெரிகிறது. மேலும் அது பிறரை வசீகரப்படுத்தும்படி நடனத்தையும் சங்கீதத்தை யும் கோயிலுக்குள் நுழைத்தார்கள்.