பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 ஆலயப் பிரவேச உரிமை. நோக்கத்துடனேயே ஆலயங்களை ஸ்தாபித்தார்கள் என்பது சரித் திரபூர்வ வமான உண்மையாகும். எவ்வாறாயினும், சாணக்கியர் காலத்தில்-அதாவது கி.மு. 300-வது ஆண்டில்-"பீடங்கள், விக்கிரகங்கள் முதலிய மதஸ்தா பனங்களுக்கும், சகல சாதி ஆண், பெண், குழந்தைகளுக்கு மது வளித்துவந்த ஸர்க்கார் கள்ளுக்கடைகளுக்கும்" அக்காலத்து அரசர்கள் யாதொரு வித்தியாசமும் ஏற்படுத்தினாரில்லை. இந்த இரண்டு அரசாங்க இலாகாக்களும் தனித்தனி அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டுவந்தன. ஒரு அதிகாரி தேவஸ்தான சூப்பிரண் டண்டு என்று அழைக்கப்பட்டுவந்தார்; மற்றவர் மதுபான சூப்பிரண்டண்டு என் அழைக்கப்பட்டுவந்தார். இந்த இரு ஸ்தாபனங்களையும் தாரதம்மியப்படுத்தி ஆராய்ச்சி செய்வது வேடிக்கையாகவும் அறிவு புகட்டுவதாகவுமிருக்கும். இந்த அரசாங்க சாராயக்கடைகளை நிர்வகிக்கும் விஷயமாக சாணக்கியர் வகுத்துள்ள சட்டதிட்டங்கள் எவையென்பதை ஆராய்வோம். இவை காலத்துக்குத்தக்க விதத்தில், போதிய திறமையுடன் ஏற்படுத்தப்பட்டு மிக வெற்றிகரமாக நிர்வகிக்கப் பட்டுவந்தன. இதைப் பின்பற்றியே ஆலய இலாகாவிலும் பல சீர்திருத்தங்கள் ஏற்பட்டிருக்கவேண்டும் என்று தெரிகிறது. "மது வகைகளைத் தயாரிக்கும் முறை தெரிந்தவர்களை வே லைக்கமர்த்தி, கோட்டைகளிலும் நாட்டுப்புறங்களிலுமட்டுமின்றி, முகாம்போடுமிடங்களிலும் மது விற்பனை செய்யவேண்டியது கள் ளுக்கடை அதிகாரியின் கடமையாகும். "தேவைக்கும் செலவுக்குத் தக்கபடி, கள்ளை ஒரு இடத்தில் தயாரித்துப் பல இடங்களுக்கும் கொண்டுபோகவோ, அல்லது பல இடங்களிலும் தயாரித்து ஆங்காங்கு விற்கவோ செய்யலாம். "சாராயத்தை அந்தந்தக் கிராமத்திலிருந்து வெளியேகொண்டு போகக்கூடாது; அடுத்தடுத்தும் கடைகளை ஸ்தாபிக்கக்கூடாது. "மீறி நடப்பவர்கள்மீது 100 பணம் அபராதம் விதிக்கப் படும்.