பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. 29 இக்கோவில்களை ஸ்தாபித்தார்கள். பின்னர், இக் கோவில்களுக் குள் தாசிகளையும், சங்கீதத்தையும் கொண்டுவந்து, வருமானத் தரும் வினோதக் காட்சிசாலைகளாக்கினார்கள். இவற்றிற்கு சமூக மதிப்பு ஏற்படும்பொருட்டு சில பிராமணர்களையும் வணங்கும்படி செய்தார்கள். அவ்விதம் வணங்க முன்வந்த பிராமணர்கள் தங் கள் ஜாதியை இழக்க நேர்ந்தமையால், அவர்களுக்கு உ உணவளிக் கவும் ஏற்பாடு செய்தார்கள். இச் சந்தர்ப்பத்தில், பிரஞ்சுப் பாதிரியாரான ஆபி டூபாயின் குறிப்புகளைக் கவனிப்போம்:- "வேசையுடனோ, கன்னிகையுடனோ சம்பந்தம் வைத்துக் கொள்வது குற்றமாகப் பார்ப்பனர் கண்ணுக்குத் தோன்றவில்லை. மாமூலுக்கு விரோதமாகச் சிறிதளவு மாறினால் கொடிய குற்ற மாகக் கருதும் இப் பார்ப்பனர்கள், எவ்வளவோ கொடிய தூர்த் தத்தனமான செய்கைகளிலும் குற்றங் காண்பதில்லை. முக்கிய மாகப் பார்ப்பனரின் உபயோகத்திற்காகவே, ஆதியில் தேவதாசி களையும், பரத்தையர்களையும் கோவில்களில் ஏற்படுத்தினார்கள். இவர்கள் அடிக்கடி 'வேசிய தர்சனம் புண்ணியம், பாபநாசம்' என்ற சுலோகத்தைச் சொல்லிக்கொள்வதைக் கேட்கலாம். 'வே சையைத் தரிசித்தால் பாவம்போய் புண்ணியம் ஏற்படும்' என் பது இதன் பொருளாகும். "ஆதியில், கோவிற் பரத்தையர்களும், நடனமாதர்களும், தேவதாசிகளும்,பார்ப்பனர் சுகபோகத்துக்காக மட்டுமே தனிப் பட ஒதுக்கப்பட்டிருந்தார்கள் என்று தெரிகிறது. ஒரு பிரத்தி யேக முறையில் இவ் விலைமாதர்கள் பொட்டுக்கட்டப்படுகிறார் கள். ஒவ்வொரு முக்கியமான கோவிலிலும் எட்டு, பன்னிரண்டு அல்லது கூடுதலான தேவதாசிகளிருக்கின்றனர். இவர்கள் தினந் தோறும் இருமுறையும், திருவிழாக் காலங்களிலும் ஆடல் பா டல் நிகழ்த்தவேண்டும்." இன்றளவும் பிராமணர்களுக்கும் தேவதாசிகளுக்கு மிருந்து வரும் அதிசயிக்கத்தக்க தொந்தம் இதினின்றும் சரித்திர பூர்வ மாக வெளியாகின்றது. தேவதாசிமுறையை ஒழிக்க வேண்டு