பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 ஆலயப் பிரவேச உரிமை. கோவிலுக்குள் பிரவேசிக்கலாம், எந்தெந்த சாதியார் பிரவேசிக்கக் கூடாது என்பதைப்பற்றிச் சட்டமியற்ற முன் வந்துவிட்டார்கள்! இவ்விஷயத்தில் பிராமணருடன் சூத்திரர்களான வேளாளர் முதலி யோரும் ஒன்றுசேர்கிறார்கள். தென்னிந்தியா முழுவதும், எந்தக் கோவிலுக்குள்ளும் இவ்விரு சமுதாயத்தார்க்கும் (கிழக்குக்கரை வேளாளரும் மேற்குக்கரை நாயர்களும் சமமானவர்) போக உரிமையுண்டென்று கருதப்படுகிறது. இதுமட்டுமல்ல; கோவி லுக்குள் யார் யார் போகலாம், யார் யார் போகக்கூடாதென்று நிர்ணயிக்கும் உரிமை தங்களுக்கிருப்பதாகவும் அவர்கள் கருதுவ தாகத் தெரிகிறது. எந்தக்கோவிலிலாவது ஒரு பிராமணன் புகுவதைக்கண்டால், ஒவ்வொரு இந்துவுக்கும் அதில் பிரவேசிக்க உரிமையுண்டு என் பதை சரித்திரம் ருசுப்பிப்பதாக ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அதேபோன்று, எக்கோவிலாவது ஒரு வேளாளனா அல்லது மற்றொரு 'சற் சூத்திரனோ புகக் கண்டால் அக் கோவிலுக்குள் வேறு யாருக்கும், இந்துவல்லா தவருக்குங்கூட, பிரவேசிக்கவும், வணங்கவும் உரிமையுண்டென்பதற்குத் தடையேயில்லை. இந்துக்கோவிலுக்குள் ஒரு பிராமணன் நுழைவதை இன்று யாரும் தடை செய்யவில்லை; அதுபோலவே ஒரு தேவதாசியை யோ, நடன மாதையோ, அல்லது தாசி மக்களையோ தடுப்பது மில்லை. இத் தாசிமக்களை முன் காலத்தில் தாசிபுத்திரர்களென அழைத்து வந்தார்கள். இந்த தாசி புத்திரர்கள்தாம் இக்காலத்து சூத்திரர்களாவார்கள். அது எவ்வாறாயினும், வேளாளர்கள் உள் பட சூத்திரர்களுக்கு ஆலயப்பிரவேச உரிமையுண்டு என்பதில் சந்தேகமில்லை. தாசி புத்திரர்களையே சூத்திரர் என அழைத்தார்கள் என்று குறிப்பிடுவதை 'சூத்திரப் பெரியார்கள்' தர்க்கித்தாலும், இந்த 'தாசி மக்கள்' யார் என்பதையும், தென்னிந்திய சமூகத்தில் அவர்கள் எந் நிலையிலிருக்கின்றார்களென்பதையுங் கவனிப்போம்.