பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அத்தியாயம் 6. இந்தியாவை இன்றுவரையிலும் ஆண்டுவந்த இந்து முஸ் ளீம், கிறிஸ்தவ அரசர்களெல்லாம் கோவில் வருமானத்தை அர சாங்கப் பொது வருமானமாகவே கருதி நடத்தி வந்தார்கள். "கடவுளுக்கு அர்ப்பணஞ்செய்த சொத்தை அரசன் எடுக் கக்கூடாது" என்று (சாணக்கியர் காலத்திற்குப் பின் ஏற்பட்ட) இந்து ஸ்மிருதிகள் வரையறுத்திருக்கின்றனவென்பதில் சந்தேக மில்லை. ஒருவேளை இங்கிலாந்தில் இம்மாதிரி ஸ்மிருதிகளில்லா த காரணத்தாலேயே, 'எட்டாவது ஹென்ரி அரசரும், கிராம்வெல் என்பாரும் மதஸ்தாபனச் சொத்துக்களைத் தயக்கமில்லாமல் அப சுரித்தார்கள்போலும்!" ஆனால், இந்தியாவில் ஸ்மிருதிகளிருந்த போதிலும், முற்கால இந்து மன்னர்கள் தங்களது 'தூர்ந்துபோன பொக்கிஷங்களை நிரப்புவதற்கு' இக்கோவில் வருமானத்தையே உபயோகப்படுத்திக்கொண்டிருந்தார்கள். ஸ்மிருதிகளுக்கு விரோதமாக அரசர்கள் இவ்வாறு நடப் பதைக் கண்டித்து இந்து வழக்கறிஞர் ஒருவர் அடியில்வருமாறு எழுதுகிறார்: "முற்கால இந்து அரசர்கள் தேவஸ்தானச்சொத்துக்களை மனம்போல் கொள்ளையடித்தார்கள்; ஆனால் போலி மடங்களையும் வேஷ சந்நியாசிகளையும், பொய்க்கடவுள்களையும் சிருஷ்டித்து ஏமாந்த மக்களிடமிருந்து பணம் வசூலிக்கத்தக்க முறையைக் கௌடிலியர் (சாணக்கியர்) அரசர்களுக்கு வகுத்தது வேறெந்தக் கொள்ளையையும் தோற்கடித்து விட்டது. எனவே அரசர்கள் தர்ம சொத்துக்களுக்குப் போஷகர்களாகவும் பாதுகாப்பாளர் களாகவு மிருப்பதைவிட்டு அவற்றைக் கொள்ளையடிப்பவர்களாக இருந்தார்கள். சாணக்கியாது அர்த்த சாஸ்திரத்தைப் பின்பற்றி இவர்கள் ஸ்மிருதிகளைக்காற்றில் பறக்கவிட்டார்கள். கோவில்களை யும் மற்ற புண்ணியஸ்தலங்களையும் தமக்கு ஆதாயம் நரக்கூடிய கருவிகளாக அரசர்கள் உபயோகப்படுத்தி வந்தார்கள்."