பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 ஆலயப் பிரவேச உரிமை. இதிலிருந்து அறியக்கிடப்பது என்ன? பண்டைக்கால இந்து மன்னர்கள் இந்த 'நல்ல' ஸ்மிருதிகளைக் குப்பைத்தொட்டியிற் போடும் காகிதமாகக்கருதினார்கள் என்பதேயாம். 'தயக்கமற்ற' சாணக்கியரைப் பின்பற்றுவதே நலமெனக்கொண்டார்கள். சாணக்கியர் ஸ்மிருதிகளுக்கு முற்பட்டவர். சாணக்கியாது அர்த்தசாஸ்திரத்தைச் சீர்திருத்தவே பிற்காலத்துப் பார்ப்பனர்கள் தங்கள் மனம் போனவாறு ஸ்மிருதிகளை வகுத்தார்கள். அர்த்த சாஸ்திரத்துக்கும் ஸ்மிருதிகளுக்கும் ஏற்பட்ட போரில் அர்த்த சாஸ்திரமே வெற்றிபெற்றதனால், ஸ்மிருதிகளைப் பின்பற்றினவர் யாரும் இருந்ததில்லை. சரித்திர சம்பந்தமாகவும், சட்ட சம்பந்த மாகவும் இது மிக முக்கியமானதாகும். ஸ்மிருதிகள் ஏற்பட்ட காலம் முதல், இங்கிலீஷ் கோர்ட்டு கள் ஏற்பட்ட காலம்வரை, இந்த ஸ்மிருதிகள் பார்ப்பானது முற் றுப்பெறாத ஆசைப்பொருள்களாகவே இருந்து வந்தன. ஐரோப் பியர்கள் வந்தபிறகு இந்த ஸ்மிருதிகள் புத்துயிர் பெற்றன.அ வர்கள் வடமொழி மீது அளவற்ற ஆர்வங்கொண்டார்கள். காலஞ் சென்ற ஜே.டி. மெயின் போன்ற மேனாட்டு வழக்கறிஞர்களை யும் இத்தொத்துவியாதி பீடித்தது. ஏனெனில் அக்காலத்தில் இத னால் இவர்களுக்கு லாபம் கிடைத்தது. இவர்களோ தாங்கள் வட மொழியறிந்தவர்களுமல்ல, சரித்திரக்காரர்களுமல்லவென்றும் ஒப் புக்கொண்டுவிட்டார்கள். எனினும் ஸ்மிருதிகள் வெறும் கதைக ளல்ல; சரித்திரத்தை வெளிப்படுத்துபவைதான் என இவர்களைப் போன்றவர்கள் வானளாவக் கதை கட்டிவிட்டார்கள். பார்ப்பன வக்கீல்களும் ஜட்ஜிகளும் இதைக்கண்டு மட்டற்ற மகிழ்ச்சியுற் றார்கள். காட்டுத்தீப்போல் இக்கொள்கை பரவிற்று. இதன் முடிவு என்ன ஆயிற்று? ஸ்மிருதிகளிலில்லாத எதுவும் 'பழக்கவழக்க'த் தை ஒட்டினதுமல்ல, சரித்திரத்தின்படி ஒப்பக்கூடியதுமல்ல வென்பதேயாம். அந்தோ! திரு.எம். ஆர். ஜெயகர் அவர்கள் பெண்கள் சொத்துரிமையைப்பற்றி வாதித்தபோது பிரிவிகௌன் ஸில் கூட ஸ்மிருதிகளால் ஏமாற்றமடைந்தது என்று சொன்னது போல, இந்துச் சட்டம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பிரிவிலும்,