பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. 43 ஒவ்வொரு வழிபாட்டிற்கும் கட்டணம் ஏற்படுத்தப்பட்டிருக்கி றது. உதாரணமாக விக்கிரகத்துக்கு ஒருவர் ஒரு ஆபாணத்தை அர்ப்பணஞ்செய்ய உத்தேசித்தால், அந்த ஆபரணத்தோடு அதன் விலைக்குச்சமமான சொக்கப்பணமும் கோவில்வகைக்காகக் கொ டுத்தால்தான் அதை அர்ப்பணஞ்செய்யலாம்; இல்லாவிட்டால் அந்த ஆபரணத்தைக் கடவுளுக்குப் பூட்டி தரிசிக்க முடியாது. ஒரு பக்தன் சூடன் கொளுத்த விரும்பினால், அதற்குரிய கட் டணத்தை முன்னதாகவே செலுத்திவிடவேண்டும். எல்லாக் காரியங்களுக்கும் இதே விதிதான்." "இதைவிட முக்கியமான விஷயம் ஒன்று குறிப்பிடவேண் டும். 1843-ம் வருஷம் வரையிலும், அதாவது பிரதிவாதிகளின் முன்னோர் டிரஸ்டியாக நியமிக்கப்படுவதுவரையிலும், கோவிற் செலவுபோக மீதமான வருமானம் முழுவதையும் அரசாங்கத் தாரே கைப்பற்றிவந்தார்கள் என்பதாகும். இந்த நடைமுறை, பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தமக்கு முந்திய இந்து முஸ்லிம் அர சாங்கத்தாரிடமிருந்து பிதுரார்ஜிதமாகப் பெற்றுக்கொண்டதாகும்; இது பண்டைக்காலம் முதலே யிருந்து வந்திருக்கிறது. மேற்கண்ட கோவில்களிலிருந்து அரசாங்கத்தாருக்கு, பத்தொன்பதாவது நூற்றாண்டு ஆரம்பத்தில் வருஷந்தோறும் கிடைத்த தொகை கிட் டத்தட்ட இரண்டுலட்சம் ரூபாயாகும்." "இவ்விதமாக லாபம் கிடைத்தது காரணமாக, பிரிட்டிஷ் அரசாங்கத்தார் 1843-ம் வருஷம்வரைத் தமது கலக்டர், தாசீல் தார் இவர்கள் மூலமாகக் கோவில் காரியங்களை மிக நுணுக்க மாகவே மேல் பார்த்து வந்தார்கள் என்று தஸ்தவேஜிகள் மூலம் தெரியவருகிறது.இக்கோவில்களை ஸர்க்கார் இலாகாவைப்போல வே கருதி, அதிக சிரத்தையெடுத்து அனாவசியமான செலவுகளைக் குறைத்தும், வருமானத்தை அதிகரித்தும், பணம் எவ்வழியிலும் திருட்டுப்போகாமல் பாதுகாத்தும் வந்தார்கள். இந்தப்பொருள் செறிந்த தீர்ப்பை நாம் எப்பொழுதும் மனத் தில் பதிய வைத்துக்கொள்வது அவசியம்; இதுவரை நாம்சொல்லி வருவதை இது நன்கு உறுதிப்படுத்துகின்றது. இதிலிருந்து நாம்