பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44 ஆலயப் பிரவேச உரிமை. அறியக்கிடப்பது என்னவென்றால், 'கோவில் வருமானமெல்லாம் அரசாங்கத்தாரைச் சேர்ந்தது. இம்முறையானது, பிரிட்டிஷ் அர சாங்கத்தாருக்கு முன்னிருந்த இந்து, முஸ்லிம் அரசாங்கங்களி டமிருந்து கிடைத்த பிதுரார்ஜிதமாகும். இதுதான் மாமூல்; பழக்க வழக்கம்." இந்த மேற்கோளை நாம் இன்னும் புலவிடங் களிலும் உபயோகிக்க நேரிடும். அத்தியாயம் 7. ஒரு பொதுக்கோவிலில் பிரவேசிக்கவும், வணங்கவும் செய் யாமல் ஒரு இந்துவை, தடை செய்ய சட்டப்படி யாருக்கு அதி காரமிருக்கிறது? 'டிரஸ்டி' களுக்கோ, தேவஸ்தானக்கமிட்டியாருக் கோ இந்த அதிகாரம் உண்டா? இவ்விரு சாராருக்கும் ஏற்பட் டுள்ள உரிமைகள் ஒருப்போல இருப்பதாகத் தெரிகிறது. இந்து சமூகத்தைச் சேர்ந்த ஏனைய வகுப்பார்களுடைய உரிமைகளைப் பற்றிப் பின்னால் கவனிப்போம். "டிரஸ்டிகளுடையவும், கமிட்டிகளுடையவும் சரித்திரத்தை முதலாவதாக ஆராய்வோம். பிரிவி கௌண்ஸிலின் ஜுடிஷியல் கமிட்டியார் சுருங்கிய பாஷயில் இவ்வாறு சொல்லுகிறார்கள்: 1810-ல் வங்காள மாகாணத்திலும், 1817-ல் சென்னை மாகா ணத்திலும், சகல இந்து, மகமதிய பொதுஸ்தாபனங்களையும், தர்மங்களையும் பிரிட்டிஷ் கவர்ன்மெண்டார் தமது ஆதீனத்தில் எடுத்து, அவைகளைத் தங்கள் செவனியூ போர்டார்களிடம் ஒப் படைத்தார்கள். 1863-ல் இங்கு குறிப்பிடவேண்டிய ஆவசிய மில்லாத சில காரணங்களை முன்னிட்டு, கவர்ன்மென்றார் இம் மத ஸ்தாபனங்களையும், தர்மங்களையும் தங்கள் ஆதீனத்தினின்றும் வேறுபடுத்தி, அந்தந்த மதஸ்தர்களின் நிர்வாகத்துக்கு உட்படுத் துவது உசிதமெனக் கருதினார்கள். இக்கருத்துடன், 1868-ம் வருட 20-வது சட்டத்தை அமைத்தார்கள்; 'கமிட்டிகள்' என்ற