பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. 45 திட்டத்தைக் கொண்டுவந்து, ஏற்கனவே கவர்ன்மெண்டுக்கிருந்த 'மானேஜர், டிரஸ்டி, சூப்பிரண்டு' ஆகியவர்களை நியமிக்கும் அதி காரத்தை இக்சுமிட்டியாருக்கு விட்டுக்கொடுத்தார்கள். சரியான படி நிர்வகிக்கவும்,நிர்வாகத்தில் குற்றங்கள் ஏற்பட்டால் அவற் றை விசாரணை செய்யும் பொருட்டு அந்தந்த ஜில்லாவி லுள்ள உயர்தரக்கோர்ட்டாருக்கு அதிகாரமளிக்கவும் தக்க சட்ட திட்டங் களை வகுத்தார்கள். இவை இந்த சட்டதிட்டத்தின் சுருக்கமான பொது லட்சியங்களாகும். இந்த சட்டத்தில், 'டிரஸ்டி' என்ற வார்த்தையின் பொருளை விளக்கவில்லை. 'மானேஜர், டிரஸ்டி, சூப் பிரண்டு ஆகிய பதங்களை யாதொருவித வித்தியாசமுமில்லாமல் இந்தச்சட்டத்தில் உபயோகப்படுத்தியிருப்பதிலிருந்து, நிர்வாகம் சரியாகவிருக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடனேயே இவற் றைப் பிரயோகிப்பதாகத் தெரிகிறது. 1863-ம் ஆண்டுச்சட்டத் திற்குப்பிறகு, பொதுவாகக்கூறுமிடத்து, முன் கவர்ன்மென்றாருக் கிருந்த 'மானேஜர்,டிரஸ்டி, சூப்பிரண்டு'களை நியமிக்கும் அதிகா ரங்களும் தர்மசொத்து பரிபாலனத்தை ஒப்புக்கொண்ட இக் கமிட்டிக்கு கவர்ன்மெண்டாரால் கொடுக்கப்பட்டன." இங்கே இரண்டு விஷயங்களைக் கவனிக்கவேண்டும். இவ்விதம் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தங்கள் ஆதீனத்திலிருந்த இந்து முஸ் லிம் மதஸ்தாபனங்களை வேறு ஆதீனத்திற்கு மாற்றவேண்டிய காரணமென்னவென்பதைக் குறிப்பிடவில்லை. 'குறிப்பிடவேண் டிய அவசியமில்லை' என்றுமட்டுஞ் சொன்னார்கள். இரண்டாவதாக, பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தங்கள் அதிகாரங்களை அந்தந்த மதஸ் தர்களுக்கு, அதாவது இந்து மகமதிய மதஸ்தர்களுக்கு விட்டுக் கொடுத்தார்களென்பது. அதாவது இந்த அதிகாரமானது இந்து சமுதாயத்தைச்சேர்ந்த ஒரு தனிப்பட்ட வகுப்பு, சாதி, பிரிவு அல்லது சமூகத்துக்குமட்டும் மாற்றப்படவில்லை யென்பது; அவ் வாறு உத்தேசிக்கப்படவுமில்லை; ஆனால் இந்துக்களனைவருக்கும் மாற்றப்பட்டதாகும். இது மிகவும் முக்கியமான விஷயம். இது போலவே மற்றொரு கேஸிலும் ஜூடிஷியல் கமிட்டியார் இவ்வாறு