பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IV


 

எனின் கஜனாவுக்குப் பணம் கொண்டுவரும், ஒரு வருவாய் தரும் டிப்பார்ட்மெண்டாகவே கருதப்பட்டு வந்தன. எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான மக்கள் கோவிலுக்குச் செல்லுகின்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு மன்னனுக்கு வருவாய் அதிகம். இவ்வாறு ஏராளமான மக்களை இழுக்கும் பொருட்டு அக்காலத்தில் மேளதாளம், நாட்டியம், தாசிப்பெண்கள் முதலியவர்களையும் கோவிலில் வைத்தார்கள். அது மட்டுமன்றி அக்காலத்தில் யாரேனும், காணிக்கை போடக்கூடியவரைக் கோவிலுக்குள் செல்லக்கூடாதெனத் தடுத்தால் அவனுக்குத் தண்டனை விதிக்கப்படும்.

இதுமட்டுமல்ல. கோவில் அர்ச்சனைக்குச் சென்ற ஜாதியார்கள் (அவர்கள் பிராமணர்கள் என்பது சந்தேகம்) விக்கிரக ஆராதனை செய்யும் காரணத்தாலும், கோவில் மானியத்தினின்று வயிறு வளர்க்கும் காரணத்தாலும் வெகு இழிவானவர்களாகப் பார்ப்பனர்களால் கருதப்பட்டு வந்தனர். கோவில் சென்று வணங்கும் பார்ப்பனர்களே ஜாதியை இழந்தவர்கள் ஆகின்றார்கள். அவர்கள் தீண்டப்படாதவரைக் காட்டிலும் ஒருவிதத்திலும் உயர்ந்தவர்கள் அல்லர்; ஆதலால் ஆசிரியர் பி.சிதம்பரம் அவர்கள் கூறுகின்றார்கள்:- கோவில் செல்லும் பார்ப்பனன் பறையனிலும் உயர்ந்தவன் அல்லன். ஆதலால் எந்தக் கோவிலில் ஒரு பார்ப்பான் செல்லுகின்றானோ அந்தக் கோவிலில் நிச்சயமாகத் தீண்டப்படாதவர்கள் நுழையலாம். வேதம், சாஸ்திரம் இவைகள் கோவில் ஆராதனையை அங்கீகரிப்பவை அல்ல. அவற்றை அனுஷ்டிக்கும் ஸ்மார்த்தப் பிராமணர்களும் கோவிலுக்குள் போகக்கூடாது. போனால் சாதியை இழந்தவர்கள் ஆவார்கள். எனவே கோவில் நுழைவு முதலிய விஷயங்களைப்பற்றி விதிக்கும் நூல், சாஸ்திரங்கள் ஒருபோதும் ஆகா. அவைகள் ஆகமங்களே யாகும். இதை ஐகோர்ட்டிலும் பிரிவி கௌன்சிலிலும் அங்கீரத்துள்ளார்கள்.

வேத சாஸ்திரங்கள் இருபிறப்பாளருக்குத்தான் உரியன. ஆகமங்களோ ஜாதிவித்தியாசம் பாராட்டாமல் இந்துக்கள் அனைவருக்கும் உரியவை. ஆகமங்களின்படி தீண்டப்படாதவர்களும்