பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

V


கூட சிவ தீட்சை பெறும் மாத்திரத்தில் எந்தக்கோவிலுக்குள்ளும் நுழையலாம். எனவே ஆகமங்கள் விதிப்படி நம் கோவில்களில் இந்து என்பவன் யாராயினும் நுழையலாம்.

இவ்விடத்தில் 'இந்து' என்பவனுக்கு இலக்கணம் என்ன என்று ஆசிரியர் ஆராய்கின்றார். ஆனால் நிரந்தரமான நிச்சயமான தொன்றும் இல்லாததால், அவர் முகமதியனாயும், கிறிஸ்துவனாயும், பௌத்தனாயும் இல்லாத இந்தியன் 'இந்து' என்று ஒருவாறு இலக்கணம் கூறியுள்ளார்.

மற்றும் கோவில்களின் பரிபாலனம் முழுவதும் 1863-வது ஆண்டுவரையில் இந்து முகமதிய கிறிஸ்தவ அரசாங்கத்தின் கையிற்றான் ஆதியிலிருந்து முறையே இருந்து வந்துள்ளது. 1817-வது வருடச் சட்டப்படி பிரிட்டிஷ் அரசாங்கம் தனது பார்வையில் ரிவின்யு போர்டார் மூலம் எல்லாக் கோவில்களையும் நடத்தி வந்தது மன்னியில் சுமார் இரண்டு கோடி ரூபா வருடாவருடம் அவற்றின் மூலம் வருமானம் பெற்று அதைப் பொதுச் செலவும் செய்து வந்துள்ளது. அதன்பின் கிறிஸ்துவப் பாதிரிகளின் கிளர்ச்சிக்கு இணங்கி அரசாங்கம் 1863-வது வருடம் அந்தந்த மதக்காரரிடம் அவ்வக் கோவிலை ஒப்படைத்து விட்டது. அரசாங்கம் அப்போது 'டிரஸ்டி'க்கு அளித்த அதிகாரம் கோவில் நிர்வாகத்தைப் பற்றி மட்டுமே தவிர, யாரை விடுவது யாரை விலக்குவது என்பது ஒன்றைப்பற்றியும் இல்லவே இல்லை. மீண்டும் வேண்டும்போது அரசாங்கம் இதில்தலையிடலும் நியாயத்தோடு நில்லாமல் சட்டப்படிக்கும் பண்டைய வழக்கப்படிக்கும் ஒத்ததாகும். இவ்விஷயத்தோடு ஆகமங்களின் விதியையும் ஒத்துப் பார்த்தால் இந்துமக்கள் யாவருக்கும் எந்தப் பொதுக் கோவிலிலும் செல்ல உரிமையுண்டு என்பது விளங்காமல் போகாது.

மற்றும் திருவனந்தபுரத்தில் நடந்த பல ஜாதிச் சண்டைகளைப் பற்றியும் வியவகாரங்களைப் பற்றியும் இன்னும் பல அரிய ருசிகரமான விஷயங்களைப் பற்றியும் தோழர், பி. சிதம்பரம்