பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. 57 "சென்னை மாகாணத்தில் ஏற்பட்டிருக்கும். ஆகம சாஸ்திரங் கள், கீழ் சாதிக்காரர்கள் ஆலயங்களில் வழிபடும் உரிமைகளைப் பற்றி நுணுக்கமாக சட்ட திட்டங்கள் வகுத்திருக்கின்றன" என்று வங்காள வழக்கறிஞரான மிஸ்டர் ஜே. ஸி. கோஷ் கூறு கின்றார். "அறிவாளிகள், ஆகம சாஸ்திரங்கள் மீதும், தாந்திரீக நூல்கள் மீதும் அதிக கவனம் இன்னும் செலுத்தவில்லை" யென்று திரு. பி. ஆர். கணபதி அய்யர் அவர்கள் குறிப்பிடு கின்றார். ஆலயங்களில் இன்ன வகுப்பார்தான் தொழுவதற்குப் பிர வேசிக்கலாமென்பதை ஆகமங்களே திட்டப்படுத்துவதாகச் சொல்லிவந்த போதிலும், பிராமண, பிராமணரல்லாத அறிவாளி களும், அகிலும் வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் உண்மையாக ஆகமங்களைப்பற்றி அதிகமாகத் தெரிந்தவர்களல்லவென்பது திரு. கணபதி ஐயர் அவர்களுடைய கூற்றினின்றும் தெளிவாகின்றது. இதனுண்மை அடியிற் கூறுவதினின்றும் இன்னும் தெளிவா கும். தென்னிந்தியாவில் முதலாவது ஏற்பட்ட பார்ப்பன ஜட்ஜி யான ஜஸ்டிஸ் முத்துசுவாமி ஐயர் அவர்கள் ஒரு பழைய கே ஸில் கூறியதாவது:-- "இந்தக் கேஸில் வாதி கேட்கிற உரிமை, கோவிலின் சில பாகங்களில் நுழையவேண்டுமென்பதாகும். ஒரு பார்ப்பனன் என்ற நிலையிலும், ஒரு பிரஜை யென்ற நிலையிலும் இவ்வுரிமையைக் கேட்க எப்பொழுதும் வாதிக்கு உரிமையுண்டு." ற இந்தக்கேஸில் வாதி, பிராமண விதவையை மணந்துகொண்ட ஒரு பார்ப்பனன்; கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் நின்று தொழு வதற்குத் தனக்கு உரிமை யுண்டு என்று வழக்காடினான்; ஆகமப் படி அத்தகைய உரிமையில்லை யென்று பிரதிவாதிகளான டிரஸ் டிகள் மறுத்தனர். ஆகமங்களைப்பற்றித் தமக்குத் தெரியாததினாலோ, அல்லது ஆசுமங்கள் ஆலயப் பிரவேசத்தைப்பற்றிக் குறிப்பிடவில்லை யென்று கருதியோ முன் சொன்னமாதிரி, ஒரு பிராமணனுக்கு