பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 ஆலயப் பிரவேச உரிமை. அவன் பிராமணன் என்ற நிலையிலும் ஒரு பிரஜை என்ற நிலையி லும் கர்ப்பக்கிரகத்திலுள்ளேயுங்கூட செல்ல பிறப்புரிமையுண்டு என்று ஜஸ்டிஸ் முத்துசுவாமி ஐயரவர்கள் விதி வகுத்தார். ஆனால், பணகுடி கோவில் வழக்கில் ஜஸ்டிஸ் ஸர். டி. சதாசிவ அய்யர் அவர்கள் அடியில் வருமாறு அபிப்பிராயப் பட்டார்: "கோவில் பூசாரிப் பார்ப்பனரல்லாத மற்ற பார்ப்ப னர்களை அனேக கோவில்களில் கர்ப்பக்கிரகத்திற்குள் போக அனு மதிப்பதில்லை; ஏனென்றால் தீட்சை பெறாதவர்களானபடியால் அவர்கள் பிராமணர்களாக இருந்தபோதிலும் அவர்கள் தீண்டு வதினால் விக்கிரகத்துக்குத் தீட்டு ஏற்பட்டுவிடும். அதாவது, ஜஸ்டிஸ் சதாசிவ அய்யரவர்களின் அபிப்பிரா யப்படி பிராமணருங்கூட ஆகம விதிப்படி, பிராமணர் என்ற காரணத்தால் கர்ப்பக்கிரகத்துக்குள் போக இடமில்லை யென்ப தாகும். ஆனால், ஜஸ்டிஸ் முத்துசுவாமி ஐயாவர்களோ, ஒவ் வொரு பார்ப்பனனும் அவன் பார்ப்பனனென்ற மாத்திரத்தி லேயே கர்ப்பக்கிரகம்வரை நுழையலாம் என்று வகுத்தார். ஆகையினால், பேர்பெற்ற ஜஸ்டிஸ் முத்துசுவாமி ஐயர் போன்ற பிராமண ஜட்ஜிகளுங்கூட ஆகமங்களைப்பற்றி அறிந்த தில்லை; எனவே, அறிவாளிகளும் ஆகமங்கள் 18 து அதிக கவ னஞ் செலுத்தவில்லையென்று திரு. கணபதி ஐவர் அவர்கள் சொல்வது சரிதான். ஆகமங்களைப் பற்றி பிராமண ஜட்ஜிகளுக் கே இவ்வளவு அறியாமை ஏற்பட்டிருந்தால், இந்துக்களல்லாத ஜட்ஜிகளுக்கு ஆகமங்களைப்பற்றி ஒன்றுந் தெரியவில்லையே யென்று அதிசயிக்கவேண்டியதில்லை. தென்னிந்தியாவிலுள்ள ஆலய நிர்வாக முறைகளை வரையறுப்பது ஆகமங்கள் தான், ஸ்மி ருதிகளல்லவென்பதைக் கோர்ட்டுத் தீர்ப்புகள் அங்கீகரித்திருக் கின்றன; இவ்விஷயத்தை இந்த இடத்தில் குறிப்பிடவேண்டிய தவசியம். பிராமணர்கள் ஆகமங்களைப்பற்றி இவ்வளவு பயப்படுவா னேன்? இதைப்பற்றி இனி ஆசாய்வோம். 10: