பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 ஆலயப் பிரவேச உரிமை வர்களுக்கே ஆகமங்கள் ஏற்பட்டன" வென்றும் அவர்கள் சொல் கிறார்கள். ஆகமங்கள் சர்வசமய சமரஸமான பரந்தரோக்க முடை யவைகளாகவும், வேதங்கள் மிகக்குறுகிய நோக்க முடையவை களாகவுமிருப்பதைக்கண்டு, கல்கத்தா ஹைக்கோர்ட்டு நீதிபதியாக இருந்த ஸர் ஜான் உட்ராப் என்பவர் அதிசயிக்கிறார். ஆகம முறைப்படி வழிபாடு நடைபெறுகின்ற கோவில்களெல் லாம்- தென்னாடு முழுவதும் இம்முறைதான் கைக்கொள்ளப்படு கிறது-இருபிறப்பாளருக்கு மட்டுமென்ற வரையறையின்றி எல் லா வகுப்பினருக்கும், எல்லா சாதியினருக்கும் பொதுவானவை யென்பது மேலே எடுத்துக் காட்டப்பட்டவற்றினின்றும், இனிக் கூறப்போவதினின்றும் அறியக்கிடக்கின்றது. நான் இதை இன் னும் தெளிவுபடுத்துகிறேன். பணகுடி ஆலயவழக்கில் ஜஸ்டிஸ் சதாசிவ ஐயர் அவர்கள் குறிப்பிட்ட இரண்டு விஷயங்களை இங்கே கவனிக்கவேண்டும்:- (1) "கர்ப்பக்கிரகத்தைப் பொறுத்த மட்டிலும், கோவில் பூசாரியினத்தைச் சேர்ந்த பார்ப்பனருக்கு மாத்திரந்தான் கர்ப்பக் கிரகத்துக்குள் நின்றுளழிபட உரிமையுண்டு. சாதாரண பார்ப்பனர் களும், பிள்ளைமார்களும், முதலியார்களும் வெளி மண்டபத்தில் நின்றுதான் தொழ உரிமை உடையவர்கள்" (2) “சாதாரண பார்ப்பனர்கள் கர்ப்பக்கிரகத்தினுள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டதில்லை; ஏனெனில் தீட்சை பெறாத பார்ப்பனர்கள் உள்ளே பிரவேசிப்பதனால் அவர்கள் பார்ப்பனராக இருந்த போதிலும் விக்கிரகத்துக்குத் தீட்டு ஏற்படுவதாகக் கருதப் பட்டு வந்தது. ஆகவே, ஆகமங்களைப் பற்றிச் சிறிதேனும் தெரிந்த ஜஸ்டிஸ் சதாசிவ ஐயாவர்களின் அபிப்பிராயப்படி சாதாரண பிராமணன் கர்ப்பக் கிரகத்துக்குள் பிரவேசிக்கக்கூடாது; பிரவேசித்தால் "தீட்டு" ஏற்படும். அவ்விதம் பிரவேசிக்க உரிமையுள்ளவர் அவரு டைய அபிப்பிராயப்படி கோவில்பூசாரி இனத்தைச் சேர்ந்த பார்ப் பனர்தான். இந்தக்கோவில் பூசாரி இனத்தைச் சேர்ந்த பார்ப்பனர். யாசென்று ஆராய்வோம்.