பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலயப் பிரவேச உரிமை. 61 “கோவில் பூசாரிகள் பார்ப்பனர்களில் மிகக் கேவலமானவர் கள் என்று கருகப்படுகிறார்கள். மனு காலத்திலிருந்தே இந்த உணர்ச்சியிருந்து வருவதாகத் தெரிகிறது" என்று அறிவு முதிர்ந்த திரு P. R. கணபதி ஐயர் அவர்கள் கூறுகிறார். ஜஸ்டிஸ் சேஷகிரி ஐயர் அவர்கள் (பிரிவி கவுன்ஸில்வரைச் சென்ற ஒரு வழக்கில் இவ்வாறு கூறுகின்றார்:-"பிரதி வாதியின் குடும்பஸ் தர்கள் (அதாவது கவுண்டர்கள், வெள்ளாளர் அல்லது சூத்திரர்கள்) இந்தக்கோவில் அர்ச்சகர்கள். ஆனால் இவர்கள் கோவில் பூசாரி வகுப்பைச் சேர்ந்தவர்களல்ல வென்பது உண் மை தான். எனினும், இன்னவகுப்பைச் சேர்ந்தவர்கள் தான் கோவிலில் பூசை செய்யலாமென்பதாக விதி யெதுவுமில்லை." தாங்க "பேர்பெற்ற சிதம்பரம் க்ஷேத்திரத்தில் ஏராளமான தீட்சதர் களிருக்கின்றார்கள்; அவர்கள் பூசை செய்யும் கட கடவுளோடு ளும் பூலோகத்துக்கு இறங்கி வந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் அந்த தீட்சதர்கள் சாதாரண கோவில்அர்ச்சகர் வகுப்பைச் சேர்ந்தவர்களல்ல." சுருங்கச் சொல்லுமிடத்து, சிதம்பரம் கோவில் தீட்சதர்கள் பார்ப்பனர்களல்ல; கோவில் பூசாரி பிராமணனாக இருக்கவேண்டு மென்பதில்லை; எந்தக் குறிப்பிட்ட வகுப்பையோ, சாதியையோ சேர்ந்திருக்கவேண்டுமென்ற நியதியுமில்லை. ஜஸ்டிஸ் சேஷகிரி ஐயாவர்களின் மேற்சொன்ன அபிப்பிரா யத்தை பிரிவி கவுன்ஸிலர்களும் ஒப்புக் கொண்டார்கள். “பிராம ணரல்லாத வகுப்பைச் சேர்ந்தவர் ஒரு இந்துப் போதுக்கோவி லில் பூசாரியாக இருப்பது ஒருவேளை நூதன மாகத் தோன்றலாம். ஆனால் சென்னைமாகாணத்திலுள்ள சில இந்துப் போதுக்கோவில் களில் சூத்திரர்கள் பூசாரிகளாக இருப்பது வெளிப்படை:"/ ஆகையினால், "கோவில் பூசாரிப் பார்ப்பனர்கள்” என்று ஜஸ்டிஸ் சதாசிவய்யர் அவர்கள் சொன்னதை மற்றொரு பிராமண உரை யாசிரியரான P. R. கணபதி ஐயர் அவர்கள் "தாழ்ந்த பிராமணர் என்பதாகச் சொன்னார்; ஜஸ்டிஸ் சேஷகிரி ஐயாவர்களும்